மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

20,000 பேரை சொந்த ஊர்களுக்கு அனுப்பியாச்சு.. இன்னும் 70,000 தொழிலாளர்கள்.. விடாமல் அசத்தும் சோனுசூட்

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் சிக்கித் தவித்து வரும் 20 ஆயிரம் பேரை சொந்த ஊர்களுக்கு அனுப்பிய நடிகர் சோனு சூட், இன்னும் 70 ஆயிரம் பேரை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அரசியல்வாதிகள் செய்யாததை இவர் செய்து வருவது அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

லாக்டவுனால் மும்பையில் சிக்கித் தவிக்கும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை சோனு சூட் செய்து வருகிறார். இவரால் இதுவரை 20 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து 24 வயது இளைஞர் ஷாஹிதுல் பார்புயா கூறுகையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நான் புனேவில் ஒரு கேன்டீனில் பணியாற்றி வந்தேன். லாக்டவுனால் கேன்டீன் மூடப்பட்டதை அடுத்து அங்கிருந்து அஸ்ஸாம் மாநிலத்திற்கு ரயில் மூலம் செல்ல முயற்சித்தேன். ஆனால் நிசர்கா புயலால் ரயில்கள் ரத்தாகிவிட்டன. இதையடுத்து மும்பையிலேயே தங்கிவிட்டேன். என்னிடம் இருந்த சிறிய தொகையும் செலவாகிவிட்டது.

"உம்"முனு இருக்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் "ஜம்மு"னு ஜொலிக்கும் சோனு.. இவர்தான் சூப்பர் ஹீரோ!

நிச்சயம்

நிச்சயம்

இதையடுத்து குர்லாவில் லோக்மான்ய திலக் பேருந்து நிலையத்தில் சக பயணிகளுடன் தங்கியிருந்தேன். இதையறிந்த சோனு சூட் மற்றும் அவரது குழுவினர் எங்களை மீட்டு பள்ளியில் தங்க வைத்துள்ளனர். மேலும் எங்களை நிச்சயம் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோக்கம்

நோக்கம்

150 பேருக்கு அரசு உதவாவிட்டாலும் சோனு உதவி செய்வார் என்றார். இதுகுறித்து சோனு சூட்டிடம் கேட்ட போது எப்படி உதவுவது என்பது குறித்த எந்த வரைமுறையும் எனக்கில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே வீட்டுக்கு செல்லக் கூடாது என்பது எனது நோக்கம்.

பஸ்கள்

பஸ்கள்

நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை அனுப்பி வருகிறோம். கடைசி புலம்பெயர்ந்த தொழிலாளி வீடு சேரும் வரை நான் இதை செய்து கொண்டே இருப்பேன். எனது நண்பரும் மும்பை ரெஸ்டாரன்ட் உரிமையாளருமான நீதி கோயலுடன் இணைந்து உதவி செய்கிறேன். இது வரை நாங்கள் 20 ஆயிரம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு பஸ்கள், ரயில்கள், விமானங்கள் மூலம் அனுப்பியுள்ளோம்.

Recommended Video

    DOCTORS DANCE| MASTER பாட்டுக்கு குத்தாட்டம் போடும் டாக்டர்கள்| CORONA STRESS BUSTER|ONE INDIA TAMIL
    அரசுடன் பேச்சு

    அரசுடன் பேச்சு

    இன்னும் 70 ஆயிரம் பேரை சொந்த ஊர்களுக்கு அனுப்ப வேண்டும். பெரிய எண்ணிக்கை என்பதால் பேருந்து சரிப்பட்டுவராது. எனவே 4 ஷ்ராமிக் ரயில்கள் மூலம் அனுப்ப வேண்டும். அடுத்த இரு வாரங்களில் இதை செய்துவிடுவோம். அரசுடன் பேசி வருகிறோம் என்றார். இது மட்டுமல்ல, நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட 28 ஆயிரம் பேருக்கு தங்குவதற்கு இடமும் உணவும் அளித்துள்ளார். அரசே செய்யாத உதவிகளை ஓசையின்றி செய்து வருகிறார் சோனு.

    English summary
    Actor Sonu sood so far have sent 20,000 people to their native. He is trying to send 70,000 people to their home.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X