ஹரியானா அடியில் காங்கிரஸ் முழிச்சிடுச்சாம்.. மகாராஷ்டிரா 'தலைக'ளுக்கு வாய்ப்பூட்டு போட்ட டெல்லி!
மும்பை: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியாமல் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ், அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் மகாராஷ்டிரா பக்கம் உடனே கவனத்தை திருப்பி இருக்கிறது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைவர்கள் வழக்கம் போல ஆளுக்கு ஒருவராக முட்டி மோதும் போக்கை உடனே நிறுத்த வேண்டும் என உத்தரவு போடுவதற்காகவே மாநில பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலாவை நேற்றே மும்பைக்கு அனுப்பி வைத்திருக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியை வீழ்த்த முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது காங்கிரஸ். பாஜக ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையை இலாவகமாக வளைத்துப் போடாமல் உட்கட்சி மோதலில் ஹரியானா தலைவர்கள் மும்முரம் காட்டியதால் கோட்டை விட்டுவிட்டனர்.

இந்த நிலையில் ஹரியானா தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போதே மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலாவை உடனே மும்பைக்கு செல்ல உத்தரவிட்டதாம் காங்கிரஸ் மேலிடம். இதனையடுத்து மும்பைக்கு பறந்து வந்த ரமேஷ் சென்னிதாலா பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார். மேலும் காங்கிரஸ் தலைவர்கள், முதல்வர் வேட்பாளர் உள்ளிட்டவை தொடர்பாக ஆளுக்கு ஒரு கருத்தை தெரிவிக்கும் போக்கை உடனே நிறுத்தியாக வேண்டும் எனவும் கறாராக உத்தரவிட்டுள்ளாராம் ரமேஷ் சென்னிதாலா.
மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மகா விகாஸ் அகாடி அணியில் உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளன. மகாராஷ்டிராவில் கூட்டணி கட்சிகள் ஆதரவு அவசியம் என்றாலும் காங்கிரஸுக்கும் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. மகாராஷ்டிராவில் பாஜகவுடன் பல தொகுதிகளில் காங்கிரஸ் நேரடியாக மோதுகிறது. ஆனால் காங்கிரஸ் தலைவர்களோ, முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் மட்டுமல்லாமல் மகா விகாஸ் அகாடி அணியிலும் குழப்பம் தீவிரமானது. இத்தகைய போக்கினால்தான் மத்திய பிரதேசம், ஹரியானாவில் அடிவாங்கினோம் என்பதை உணர்ந்ததாலோ என்னவோ உடனே ரமேஷ் சென்னிதாலாவை மும்பைக்கு அனுப்பி வாய்ப்பூட்டு போட வைத்திருக்கிறதாம் டெல்லி காங்கிரஸ் மேலிடம்! ஓஹோ முழிச்சுடுச்சோ!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications