அப்போ அந்த ரூ.15 லட்சம்? பாஜகவின் வாக்குறுதிகள் எல்லாம் ஏப்ரல் ஃபூல் - கலாய்த்த சிவசேனா எம்.பி.
மும்பை: வங்கிக் கணக்குகளில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும், கருப்புப் பணம் மீட்கப்படும் என்பன போன்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் முட்டாள்கள் தின நகைச்சுவை என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
ஏப்ரல் ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் ஒருவரை ஒருவர் நகைச்சுவையாக ஏமாற்றி மகிழவும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒருவர் மீது மற்றொருவர் சாயம் பூசிக்கொண்டு விளையாடவும் செய்கின்றனர்.
அதேபோல் மீம் கிரியேட்டர்களுக்கும், சமூக வலைதள பதிவர்களுக்கும் முட்டாள்கள் தினம் என்பது சூப்பரான கான்செப்டாக மாறிவிட்டது. அந்நாளில் நிகழ்கால அரசியல் பிரச்சனைகள், சமூக பிரச்சனைகள், விமர்சனங்கள் என அனைத்தையும் முட்டாள்கள் தினத்தோடு ஒப்பிட்டு மீம்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
ஏப்ரல் ஒன்றாம் தேதியான நேற்றும் அதுபோல் ஏராளமான பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த பாணியை தற்போது அரசியல் தலைவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கையில் எடுத்து இருப்பதை நேற்றைய தினம் காண முடிந்தது.

பாஜகவை முட்டாள்கள் தினத்தோடு ஒப்பிட்ட சிவசேனா எம்.பி
இதில் முதன்மையானவர் சிவசேனாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜகவின் நெருங்கிய நட்பு கட்சியாக திகழ்ந்த சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து பாஜக மீது கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து தொடுத்து வரும் சஞ்சய் ராவத், நேற்றும் பாஜக அரசை முட்டாள்கள் தினத்தோடு ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.

ரூ.15 லட்சம் வழங்கும் திட்டம் ஏப்ரல் ஃபூல்
நேற்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளான 'அச்சே தின், ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்குகளிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும், கருப்புப் பணம் மீட்கப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும்' போன்றவை முட்டாள்கள் தின நகைச்சுவைகள்." என்றார்.

பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்
"அரசு மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கிறது. நாங்கள் பழிவாங்கும் அரசியலில் ஈடுபட மாட்டோம் என பாஜக கூறி வருவதும் ஏப்ரல் ஃபூல் நகைச்சுவைதான். கடந்த சில ஆண்டுகளாக இதுதான் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது." என்றார்.

7 ஆண்டுகளாக முட்டாள்களாக்கப்படும் மக்கள்
தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது குறித்து பேசிய அவர், "ஆட்சியாளர்கள் எப்போதும் சாமானிய மனிதனை முட்டாளாக்கப் பார்க்கின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக பொதுமக்கள் முட்டாள்கள் ஆக்கப்படுகின்றனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐயும், அமலாக்கத்துறையும் பாஜக ஆளாத மாநிலங்களில் சோதனையிட்டு குழப்பத்தை உண்டாக்குகின்றனர்." என்றார்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்












Click it and Unblock the Notifications