பாபா சித்திக் கொலைக்கு இடையே..சட்டென சல்மான் கானுக்கு உயர்த்தப்பட்ட பாதுகாப்பு! ஏன்? யாரந்த லாரன்ஸ்?
மும்பை: முன்னாள் அமைச்சரும் என்சிபி தலைவருமான பாபா சித்திக் நேற்று மாலை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மென்ட்டுக்கு வெளியே பாதுகாப்பு கூட்டப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக், மும்பையின் பாந்த்ரா கிழக்கில் நேற்று இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.
என்சிபி தலைவர் பாந்த்ராவில் (கிழக்கு) நிர்மல் நகரில் உள்ள கோல்கேட் மைதானத்திற்கு அருகிலுள்ள அவரது மகன் எம்எல்ஏ ஜீஷன் சித்திக் அலுவலகத்தில் இருந்தார். எம்எல்ஏ அலுவலக நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்த பின் இரவு 9.30 மணியளவில் அலுவலக வளாகத்தில் இருந்து பாபா சித்திக் வெளியேறினார்.

வெளியே வந்த சில நிமிடங்களில் பாபா சித்திக்கை ஒரு கும்பல் சுற்றி வளைத்துள்ளது. கைக்குட்டையால் முகத்தை மறைத்திருந்த மூன்று பேர், தங்கள் காரில் இருந்து இறங்கி பாபா சித்திக்கை சுட்டு உள்ளனர். அலுவலகத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடித்த நிலையில்.. சரியாக அந்த நேரத்தில் பாபா சித்திக் மீது மூன்று ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.
படுகாயமடைந்த சித்திக் மார்பில் சுடப்பட்டு கீழே விழுந்தார். அவர் உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் இறந்தார். துப்பாக்கிச் சூட்டில் 9.9 மிமீ கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பாதுகாப்பு: முன்னாள் அமைச்சரும் என்சிபி தலைவருமான பாபா சித்திக் நேற்று மாலை கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மென்ட்டுக்கு வெளியே பாதுகாப்பு கூட்டப்பட்டு உள்ளது.
கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளான ஹரியானாவைச் சேர்ந்த கர்னைல் சிங் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தரம்ராஜ் காஷ்யப் ஆகியோர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். போலீஸ் விசாரணையின் போது, தற்போது தாங்கள் சிறையில் உள்ள பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர் ஏற்கனவே சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அவர்தான் இப்போது பாபா சித்திக் கொலை வழக்கிலும் மாட்டி உள்ளார். இந்த கொலை வழக்கை விசாரிக்க 5 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக அரசியல், மத கோணத்தையும் ஆய்வு செய்ய உள்ளதாக மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் காரணமாகவே சல்மான் கான் வீட்டிற்கு பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. சல்மான் கான் நேற்று இரவு லீலாவதி மருத்துவமனைக்குச் சென்று தனது சித்திக் குடும்பத்தைச் சந்தித்தார். பாபா சித்திக் குடும்பத்தினரிடம் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்தார்.
இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் ஏற்கனவே சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் கடந்த ஏப்ரல் 14 அன்று, சல்மான் கானின் பாந்த்ரா இல்லத்திற்கு வெளியே பைக்கில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தாக்குதல் நடத்திய விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகியோர் குஜராத்தில் பின்னர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் ஆட்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications