இதெல்லாம் வேற லெவல்.. அம்பானி வீட்டு கல்யாண பத்திரிக்கையை பார்த்தீங்களா.. திறந்ததும்! ஆ.. என்ன இது?
மும்பை: முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண அழைப்பிதழ் மிகவும் ஆடம்பராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த அழைப்பிதழ் சமூகவலைதளங்களில் வைரலாவதால் நெட்டிசன்கள் ஸ்டன் ஆகி போயிருக்கிறார்கள்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, இவருக்கும் இவருடைய பள்ளித் தோழி ராதிகா மெர்சன்ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி நிச்சயதார்த்தம் நிகழ்ந்தது. இருவருக்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது.

இந்த திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1ஆம் தேதி தொடங்கி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து விஐபிக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட் திருமண நாளுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் அவர்களது திருமண அழைப்பிதழ் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆடம்பரமான அழைப்பிதழ் ஒரு கோயிலை போன்று பெட்டியில் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது.

அதை திறந்தவுடன் திருமண விவரங்கள் தெய்வ உருவங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழை திறந்தவுடன் அதில் மங்கள இசையும் விஷ்ணு சகஸ் ஒலிக்கிறது. பெட்டியின் உள்ளே தெய்வங்களில் தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட விக்கிரகங்கள் உள்ளன.
திருமண நிகழ்ச்சிகளுக்கான வெவ்வேறு அழைப்பிதழ் அட்டைகள் உள்ளன. திருமணத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பிள்ளையார், விஷ்ணு, லட்சுமி, ராதா கிருஷ்ணா, துர்கை உள்ளிட்டோரின் படங்கள் உள்ளன. அதில் தங்கள் வீட்டு விசேஷத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும் என கைகளால் எழுதப்பட்ட கடிதமும் இருக்கிறது.

அதில் சிறிய விளக்குகள் உள்ளன. கைகளால் நெய்யப்பட்ட ஒரு பட்டு சால்வையும் அந்த பெட்டியில் உள்ளது. அது காஷ்மீர் கலைஞர்களின் கைவண்ணத்தில் செய்யப்பட்டது. அதுபோல் உலர் பழங்களும் இருந்தன. இந்த அழைப்பிதழ்கள் சினிமா, அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு வழங்கப்படுகிறது. முகேஷ் அம்பானி வீட்டு விசேஷங்கள் என்றாலே அது ஆடம்பரத்தைத்தான் குறிக்கும். அழைப்பிதழே இப்படி இருக்கும் போது உணவு, உபசரிப்புக்கு பஞ்சமிருக்காது.
ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தமே மிகவும் சிறப்பாக இருந்தது. இதில் நீடா அம்பானி அணிந்திருக்கும் உடை, அணிகலன்கள் மற்றவர்களின் கவனத்தை பெறும். அது போல் ராதிகாவுக்கு ஆனந்த் ஒரு பச்சை நிற வைர நெக்லஸ் பரிசாக கொடுத்திருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications