மூத்த ஊழியர் தன் காலில் விழுந்த போது தடுக்காத ஆனந்த் அம்பானி.. பணத்தின் பவர்.. நெட்டிசன்கள் தாக்கு
மும்பை: வயதில் மூத்தவர் தனது காலில் விழும் போது அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த ஆனந்த் அம்பானி குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அவருக்கு கண்டனங்களும் குவிகின்றன.
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி. இவருடைய மகன் ஆனந்த் அம்பானி. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தில் எரிசக்தி துறையை தற்போது ஆனந்த் அம்பானி கவனித்து வருகிறார்.
இவருக்குத்தான் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. இவருக்கு மும்பை தொழிலதிபர் விரன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்சண்ட்டுடன் திருமணம் நடைபெறவுள்ளது. ராதிகா தனது தந்தையின் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார்.

நிச்சயதார்த்தம்
இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடந்தது. இவர்களது புகைப்படம் வைரலானது. இந்த படத்தில் ஆனந்த் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். அவருடைய பழைய புகைப்படங்களை ஒப்பிட்டு பலர் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் ஆனந்த் அம்பானியின் உடல் அதிகரித்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

உடற்பயிற்சி
2016 ஆம் ஆண்டு கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டின் காரணமாக உடல் எடையை சுமார் 100 கிலோ அளவுக்கு குறைத்தார். ஒரு வேளை செய்த உடற்பயிற்சியை அவர் தொடராமல் விட்டுவிட்டாரோ என்ற கேள்வியும் எழுந்தது. இவரும் ராதிகா மெர்சண்ட்டும் காதலித்து வந்ததாகவும் டேட்டிங் செய்ததாகவும் தகவல்கள் வந்தன.

முகேஷ் அம்பானி
இதுவரை சர்ச்சைகளில் சிக்காதவர்கள் முகேஷ் அம்பானியின் மகன்கள். ஆனால் இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதில் தன்னைவிட வயதில் பெரிய ஊழியர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆனந்த் அம்பானி கலந்து கொள்கிறார். அந்த நிகழ்வில் அவருக்கு கேக் வெட்டப்படுகிறது.

ஊழியர் பிறந்தநாள்
உடனே அந்த ஊழியர் ஆனந்த் அம்பானியின் கால்களில் விழுகிறார். தன்னைவிட வயதில் மூத்தவர் தன் கால்களில் விழுகிறாரே என்ற பதற்றம் கொஞ்சம் கூட இல்லாமல் அவரை தட்டி கொடுக்கிறார். பின்னர் கேக்கை ஊட்டி விடுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. நிறைய பேர் ஆனந்த் அம்பானிக்கு கண்டனங்களை தெரிவிக்கிறார்கள்.

மூத்தவர்கள்
எவ்வளவுதான் பணம் இருந்தாலும் தன்னைவிட மூத்தவர்களை காலில் விழ வைப்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று பெரும்பாலானோர் தங்கள் காலில் சிறியவர்கள் விழுவதைகூட விரும்பாமல் தலையில் கைவைத்தவாறே ஆசிர்வாதம் செய்கிறார்கள். அங்கு சுற்றியிருக்கும் நபர்களில் சிலர் கைகளை கூப்பி வணக்கம் கூறியபடியே இருக்கிறார்கள்.

பணத்தின் பவர்
இதுதான் பணத்தின் பவர் என பலர் விமர்சிக்கிறார்கள். ஆனந்த் அம்பானிக்கு அவரது பெற்றோர்கள் மரியாதையையும் பெரியோரிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என நிறைய பேர் அறிவுரை வழங்கி வருகிறார்கள். இவர்களை போன்ற தொழிலாளிகளின் கடும் உழைப்பால்தான் தங்கள் தந்தை பணக்காரராக இருக்கிறார் என்பதையும் மறக்க வேண்டாம் என பதிவிட்டு வருகிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications