ஆர்யன் கான் கடத்தல் வழக்கின் சூத்திரதாரியே பாஜகவின் மொகித் கம்போஜ்- மகா. அமைச்சர் நவாப் மாலிக்
மும்பை: சொகுசு கப்பலில் போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக நடிகர் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது என்பதே பணம் பறிப்பதற்கான கடத்தல் சம்பவம்தான் என்று மகாராஷ்டிரா அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பையில் சொகுசு கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்து தொடர்பான வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கடந்த மாதம் 28-ந் தேதி ஆர்யன்கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இவ்வழக்கில் ஆர்யன்கானை விடுவிக்க போதைப் பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்டோர் ரூ25 கோடி பேரம் பேசப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும் சமீர் வான்கடேவை திட்டமிட்டே பாஜகதான் இயக்கி வருவதாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

கடத்தல், பணம் பறிப்பு
இதனிடையே இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் நவாப் மாலிக் கூறியதாவது: சர்ச்சைக்குரிய சொகுசு கப்பலில் பயணம் செய்வதற்கு ஆர்யன் கான் டிக்கெட் கூட வாங்கவில்லை. ஆர்யன் கானை சொகுசு கப்பலுக்கு அழைத்தவர்கள் பிரதிக் கபா, அமீர் ஆகியோர்தான். ஆர்யன்கானை கடத்தி பணம் பறிக்கத்தான் அவர் சொகுசு கப்பலுக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

பாஜகவின் மொகித்
இந்த கடத்தல் சம்பவத்தின் சூத்திரதாரியாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவின் கூட்டாளியாக செயல்பட்டது மொகித் கம்போஜ்தான். ஆர்யன் கான் கைது செய்யப்பட்டது முதல் ஷாருக்கான் தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்தார். இத்தனைக்கும் ஷாருக்கான் தமது மேனஜரிடம் கூட பேச அனுமதிக்கவும் இல்லை. இந்த விவகாரத்தில் ஷாருக்கான் மவுனம் கலைக்க வேண்டும்.

ஷாருக்கான் மவுனம் கலையட்டும்
மகன் ஆர்யன் கான் கடத்தப்பட்டிருந்தால் பணம் கொடுத்து மீட்டது ஒன்றும் குற்றம் அல்ல என்பதை ஷாருக்கான் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் ஆர்யன் கான் விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை ஷாருக்கான் விளக்க வேண்டும். ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட பின்னர் சமீர் வானகடேவும் மொகித் கம்போஜும் கல்லறை ஒன்றில் அக்டோபர் 7-ல் சந்தித்து பேசினர். சுனில் பாட்டீல் என்பவரை நான் சந்தித்ததாக கூறப்படுவது அப்பட்டமான பொய்.

பாஜகவுக்கு எதிரான போராட்டம்
போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் சர்ச்சைக்குரிய சாம் டிசோசா தொலைபேசியில் பேசிய உரையாடல்களையும் நான் வெளியிட்டுள்ளேன். ஆனால் சாம் டிசோசா கைது செய்யப்படவில்லை. இவ்வழக்கில் தம்மை விடுவிக்க ஹவாலா மூலம் பணம் கொடுத்ததாக சாம் டிசோசா கூறியுள்ளார். நான் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எதிராக போராடவில்லை. பாஜகவின் சதித் திட்டங்களுக்கு எதிராகவே போராடுகிறேன். இவ்வாறு நவாப் மாலிக் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications