இந்தியா ஏழை நாடா? இல்லை பணக்கார நாடா? "வினோதமா இருக்கே.." பற்ற வைத்த ஆஸ்திரேலிய இளைஞர்.. சர்ச்சை
மும்பை: இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர், மும்பையில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிக வேறுபாடு இருப்பதாகச் சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், அது பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
இப்போது பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவைச் சுற்றிப்பார்க்க மக்கள் வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் அழகையும் பிரம்மாண்டத்தையும் பன்முகத்தன்மையையும் கண்டு வியந்து போகிறார்கள். அதேநேரம் சிலர் இந்தியா பற்றிக் கூறும் கருத்துகள் சர்ச்சையாகவும் வெடிக்கிறது.

ஆஸ்திரேலிய இளைஞர்
அப்படித் தான் ஆஸ்திரேலிய இளைஞர் ஜெர்மி பிராங்கோ என்பவர் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறார். அவர் இந்தியாவில் ஏற்ற தாழ்வுகளை வெளிப்படையாகப் பார்க்க முடிவதாகச் சொல்லி மும்பையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் வீடியோ ஒன்றை எடுத்துப் பதிவிட்டிருக்கிறார். அது இப்போது பெரிய விவாதமாகவே மாறியுள்ளது.
வெறும் சில அடி தொலைவில்!
பிரபலமான லோயர் பரேல் பகுதியில் உள்ள பிரபல மாலில் இந்த வீடியோவை ஜெர்மி பிராங்கோ எடுத்துள்ளார். அங்கு ஜெர்மி பிராங்கோ குஸ்ஸி மற்றும் டியோ போன்ற ஆடம்பரக் கடைகள் இருப்பதை அவர் பார்வையிடுகிறார். இது குறித்து பிராங்கோ அந்த வீடியோவில் மேலும் கூறுகையில், "இந்தியாவில் நீங்கள் இரண்டு நொடிகளில் ஏழையிலிருந்து பணக்காரராக மாறலாம். ஏனென்றால் நான் ஏன் ஒரு ஆடம்பர மாலில் இருக்கிறேன். இந்த இடத்தில் இருந்து வெளியே இரண்டு மீட்டர் தூரத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் செட் போல இருக்கும் இடம் உள்ளது" என்றார்.
டேனி பாயில் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான ஸ்லம்டாக் மில்லியனர் மும்பையில் ஆடம்பரம் மற்றும் வறுமைக்கு இடையே உள்ள வேறுபாட்டைச் சித்தரிக்கிறது. நகர்ப்புறங்களில் மக்கள் படும் கஷ்டம் என்பது பெரும்பாலும் ஆடம்பர இடங்களிலிருந்து சில அடிகள் தொலைவில் உள்ளது போல அதில் காட்டப்பட்டு இருக்கும். இந்தப் படத்திற்குத் தான் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது.
குடிசைப் பகுதி
மும்பையில் பணக்காரர்கள் வரும் ஷாப்பிங் மால்களில் ஒன்றான இந்த மாலுக்கு சில அடி தொலைவிலேயே அங்கு மிகப் பெரிய குடிசைப் பகுதி இருக்கிறது. மும்பையில் ஏற்றத்தாழ்வு எந்தளவுக்கு இருக்கிறது என்பதையே இது பிரதிபலிக்கிறது. இந்தியா ஒரே நேரத்தில் ஏழையாகவும் இருக்கிறது... பணக்காரராகவும் இருக்கிறது எனச் சொல்லி பிராங்கோ இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
கிளம்பிய விவாதம்
இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டானது. இதற்கு இணையத்தில் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் என இரு விதமான ரியாக்ஷன்கள் வந்துள்ளன. இந்திய நகரங்களில் செல்வம் ஒரு தரப்பிற்கு மட்டும் குவிந்து வருவதாகவும் ஏற்றத்தாழ்வு அதிகரித்துவிட்டதாகவும் சிலர் சொல்லி, பிராங்கோவின் கருத்துடன் உடன்பட்டனர். இருப்பினும், மற்றொரு தரப்பினர் இது தப்பான ஒரு ஒப்பீடு எனக் கூறியுள்ளனர்.
இது குறித்து நெட்டிசன் ஒருவர், "இந்தியாவில் செல்வ ஏற்றத்தாழ்வு மிகவும் மோசமாக உள்ளது" என்றார். மற்றொருவர் கூறுகையில், "நான் சிறுவனாக மும்பையில் இறங்கியபோது, இந்த வேறுபாடு என்னை மிரள வைத்தது. ஒரு பக்கம் எல்லாம் இருப்பவர்கள் உள்ளனர். இன்னொரு பக்கம் எதுவுமே இல்லாதவர்கள் இருக்கிறார்கள்" என்றார்.
எதிர்ப்பு
அதேநேரம் கிட்டதட்ட சரிபாதி பேர் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. இந்தியா பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய நாடு என்றும் இங்குப் பல தரப்பு மக்கள் இருப்பார்கள் என்றும் வெளிநாட்டினர் அதைப் பார்ப்பதில்லை என்கிறார்கள். மற்றொரு நபர் அமெரிக்காவில் ஏழை மற்றும் பணக்காரருக்கு இடையே உள்ள செல்வா வேறுபாடு உடன் ஒப்பிடுகையில் இது குறைவு என்றனர். மேலும், அமெரிக்காவில் உள்ளதைப் போல ஆபத்தான நிலையிலும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications