Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள்..மாஸ் காட்டும் பாஜக கூட்டணி! கைகொடுத்த தமிழக மாடல்.. இதுதான் விஷயமே!

Subscribe to Oneindia Tamil

மும்பை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தின் 'திராவிட மாடல்' திட்டத்தை பயன்படுத்தியே பெண்களின் ஆதரவை பெற்று பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா யுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் நேற்று முன் தினம் மொத்தம் உள்ள 288 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

election results 2024 maharashtra assembly election 2024 bjp 2024

இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், ஏத்நாத் ஷிண்டே சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டன.

காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 95 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவர் பிரிவு 86 இடங்களிலும் வேட்பாளர்களை களம் இறக்கின.

இந்த தேர்தலில் பிரதான கட்சிகள் தவிர, அதிருப்தி வேட்பாளர்கள், சுயேட்சைகள் என சுமார் 4000 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 20ஆம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் 6:00 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 9.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் சுமார் 66 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

பெரும்பான்மைக்கு 145 தொகுதிகளில் தேவைப்படும் நிலையில், பாஜக கூட்டணி பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளை பெற்றிருக்கிறது. தற்போதைய சூழலில் பாஜக 230க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் பிற கட்சிகள் ஆறு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இதனால் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகியுள்ளது.

ஆரம்பத்தில் பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு, பாஜக கட்சிக்குள்ளேயே உள்ளடி வேலை பார்த்தது என பல பிரச்சனைகள் இருந்தது. இருந்த போதும் அதனை எல்லாம் தவிடு பொடியாக்கி தற்போது பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. 1972 க்கு பிறகு இவ்வளவு பெரிய வெற்றியை எந்த கூட்டணியும் பெற்றதில்லை என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். அதே நேரத்தில் பெண்களின் வாக்கு வங்கி இந்த தேர்தலில் மிகப்பெரிய அளவு பாஜக கூட்டணிக்கு கை கொடுத்திருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் வழங்கப்படுவது போல பெண்களுக்கு, லட்கி பஹின் யோஜனா திட்டத்தின் கீழ் உரிமை தொகை வழங்கப்படும் என பாஜக கூட்டணி அறிவித்து 1500 ரூபாயை முதல்கட்டமாக வழங்கியது. அதேபோல தேர்தல் வாக்குறுதியின் போது 2500 ரூபாய் மாதம் பெண்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது.

பாஜகவை விட 500 ரூபாய் அதிகமாக வழங்கப்படும் என காங்கிரஸ் கூட்டணி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெண்களின் மனநிலை வேறாக இருந்தது. ஆட்சியில் இருக்கும் போது 1500 ரூபாய் கொடுத்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2500 ரூபாய் நிச்சயம் கொடுப்பார்கள். ஆனால் ஆட்சியில் இல்லாதவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 3000 ரூபாய் கொடுப்பார்களா என்ற கேள்வி மக்களிடையே எழுந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே மகாராஷ்டிரா மக்கள் குறிப்பாக பெண்கள் பாஜக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்கி உள்ளனர். ஏற்கனவே டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தமிழகத்தின் மகளிர் உரிமை தொகைத் திட்டம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மகராஷ்டிரா தேர்தலிலும் திராவிட மாடல் திட்டமே பாஜக கூட்டணிக்கு வெற்றியை தேடி தந்திருக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+