போட்டோ எடுத்தபோது குறுக்கே போன நபர்.. காலால் எட்டி உதைத்த பாஜக மூத்த தலைவர்! விளக்கத்தை பாருங்க
மும்பை: மகாராஷ்டிராவில் போட்டோ எடுத்தபோது குறுக்கே வந்த தொண்டரை பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராவ்சாகேப் தன்வே தனது காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் வரும் 20ம் தேதி சட்டசபை தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

தற்போது இந்த 3 கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கும் நிலையில் வரும் தேர்தலில் மீண்டும் வென்று அரியணை ஏறும் வகையில் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான ராவ்சாகேப் தன்வே, சிவசேனா கட்சியின் முன்னாள் அமைச்சரான அர்ஜூன் கோட்காரை சந்தித்தார். அப்போது அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கினார். அதன்பிறகு ராவ்சாகேப் தன்வே மற்றும் அர்ஜூன் கோட்கார் ஆகியோர் ஒன்றாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
இந்த வேளையில் ஒருவர் திடீரென்று போட்டோவுக்கு குறுக்கே வந்தார். இதனை கவனித்த ராவ்சேகேப் தன்வே தனது காலால் அந்த நபரை எட்டி உதைத்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து விலகி நின்றார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. பலரும் ராவ்சாகேப் தன்வேயின் செயலை விமர்சனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் செயல்பட்டு வரும் அவரது மகன் ஆதித்ய தாக்கரே கூறுகையில், ‛‛ராவ்சாகேப் தன்வேக்கு கண்டிப்பாக கால்பந்து கொடுக்க வேண்டும். பாஜகவில் செயல்பட்டு வரும் தொண்டர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் பாஜகவுக்கு ஓட்டளிக்க வேண்டுமா? என்பதை அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்'' என்று கூறினார்.
இதற்கிடையே தான் ராவ்சாகேப் தன்வேயிடம் உதைப்பட்ட நபர் நான் அவரது நண்பர் தான். இருவருக்கும் 30 ஆண்டு பழக்கம் உள்ளது என்று கூறியுள்ளார். இதுபற்றி உதைப்பட்ட நபர் கூறுகையில், ‛‛ நான் ராவ்சாகேப்பின் நெருங்கிய நண்பர். இருவருக்கும் 30 ஆண்டு நட்பு உள்ளது. அவர் எட்டி உதைத்ததாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை. நான் ராவ்சாகேப்பின் சட்டையை தான் சரிசெய்ய முயன்றேன்'' என்று கூறியுள்ளார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications