ஆட்டம் டோட்டலா மாறுதே? ‘இந்தியா’ கூட்டணிக்கு வேட்டு? புனேவில் ரகசிய மீட்டிங்.. வேலையை காட்டும் பாஜக?
மும்பை: 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இந்த மாத இறுதியில் மும்பையில் நடைபெறவுள்ள நிலையில், சரத் பவார், அஜித் பவார் புனேவில் ரகசிய சந்திப்பு மேற்கொண்டுள்ளது தேசிய அளவில் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பாஜக அரசை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. 'இந்தியா' என இந்த கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஆம்ஆத்மி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், முக ஸ்டாலினின் திமுக, மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா கூட்டணி சார்பில் 2 ஆலோசனை கூட்டங்கள் இதுவரை நடந்துள்ளன. முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2வது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் நடந்து முடிந்துள்ளது. இந்தியா கூட்டணி தலைவர்களின் 3வது ஆலோசனை கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணியின் அடுத்தகட்ட வியூகங்கள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இந்நிலையில் தான் அஜித் பவாருடன் சரத் பவார் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மகாராஷ்டிராவில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் மற்றும் எம்எல்ஏக்கள் அம்மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அஜித் பவார் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். இதன் மூலம் தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார், அஜித் பவார் என 2 அணியாக உள்ளது.
இந்தச் சூழலில், புனேவின் கோரேகான் பார்க் பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் அதுல் சோர்டியாவின் பங்களாவில் சரத் பவாரும், அஜித் பவாரும் சந்தித்துப் பேசியுள்ளனர். இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதியம் 1 மணியளவில் அங்கு வந்த சரத் பவார் 5 மணியளவில் அங்கிருந்து கிளம்பியுள்ளார், அஜித் பவார் அங்கிருந்து 6.45 மணியளவில் புறப்பட்டுச் சென்றுள்ளார். தனித்தனியா இருவரும் புறப்பட்டுச் செல்லும்போது மீடியா கேமராக்களை தவிர்க்க முயன்றுள்ளனர்.
இந்தச் சந்திப்பு குறித்துப் பேசிய தேசியவாத காங்கிரஸ் நிர்வாகி ஜெயந்த் பாட்டீல், "இது ரகசிய சந்திப்பு அல்ல, குடும்ப விவகாரம் தொடர்பாகவே இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். நான் சரத் பவாருடன் அங்கு சென்றேன்.அங்கிருந்து விரைவாகவே கிளம்பிவிட்டேன். அதன்பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை." எனக் கூறியுள்ளார்.
சரத் பவாரை 'இந்தியா' கூட்டணியில் இருந்து பிரிப்பதற்காக பாஜக தலைமை அஜித் பவார் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி வலுவடைந்தால் தங்களுக்கு சிக்கல் எனக் கருதும் பாஜக, இந்தக் கூட்டணியை உடைக்கும் முயற்சியாக, இந்த கூட்டணி உருவாக்கத்தில் முக்கியச் செயலாற்றும் சரத் பவாரை தூக்க முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதில் அளித்துப் பேசும்போது, காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் புனேவில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பிரதமர் மோடியுடன் சரத் பவாரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி, நாடாளுமன்றத்திலேயே 'இந்தியா' கூட்டணி குறித்து கடுமையாகப் பேசியது, சரத் பவார் பற்றி சாஃப்ட் கார்னருடன் பேசியது, பிரதமர் மோடியும் பவாரும் ஒரே மேடையை பகிர்ந்து கொண்டது, இப்போது நடந்திருக்கும் இந்த சரத் பவார் - அஜித் பவார் சந்திப்பு ஆகிய தொடர் நிகழ்வுகள், அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அஜித் பவார் மூலம் 'இந்தியா' கூட்டணியில் இருந்து சரத் பவாரை பிரிக்கும் முயற்சிகளை பாஜக தொடங்கியிருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications