சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு இல்லை.. நீதிமன்றத்தில் சொன்ன சிபிஐ

Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங்கை ரியா சக்ரவர்த்தி தற்கொலைக்கு தூண்டினார், அவரிடம் பணம் பறித்தார் என வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சுஷாந்த் குடும்பத்தினர் அளித்த புகாரை விசாரித்த சிபிஐ, சுஷாந்த் மரணத்தில் ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீக்கி வழக்கை முடித்து வைப்பதற்கான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தமது வீட்டில் தூக்கில் தொங்கியபடி நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல் மீட்கப்பட்டது. சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனியின் பயோபிக்கான 'எம்எஸ் தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி', 'கேதார்நாத்', 'சிச்சோரே' என சில படங்களில் நடித்துள்ளார்.

Sushant singh cbi court

அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மரணம் இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த தற்கொலை குறித்த சந்தேகம் நாளுக்குநாள் வலுப்பெற தொடங்கியது. சுஷாந்த் சிங்கை நடிகை ரியா சக்கரவர்த்தி தான் தற்கொலைக்கு தூண்டினார் என சுஷாந்தின் தந்தை புகார் அளித்திருந்தார்.

சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே சிங் அளித்த மனுவை விசாரித்து, ஐகோர்ட் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வந்தது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் சிபிஐ தனது இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சிபிஐ நீக்கியுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த வழக்கில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தற்கொலைதான் என்றும், இதில் ரியா சக்ரவர்த்திக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் சிபிஐ தனது அறிக்கையில் கூறி, வழக்கை முடித்து வைத்துள்ளது. அந்த அறிக்கையின்படி, ரியா சக்ரவர்த்தியோ அல்லது வேறு யாரும் சுஷாந்த் சிங் சட்டவிரோதமாக அடைத்து வைத்ததற்கோ, அச்சுறுத்தியதற்கோ அல்லது தற்கொலைக்குத் தூண்டியதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ரியா சக்ரவர்த்தியும் அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தியும் சுஷாந்தின் பாந்த்ரா குடியிருப்பில் இருந்து அவர் இறப்பதற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக, அதாவது ஜூன் 8, 2020 அன்று வெளியேறிவிட்டனர். அதன்பிறகு அவர்கள் சுஷாந்தை சந்திக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுஷாந்தின் பொருட்களை ரியா எடுத்துக்கொண்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது. சுஷாந்த் பரிசளித்த தனது ஆப்பிள் லேப்டாப் மற்றும் கைக்கடிகாரத்தை மட்டுமே ரியா எடுத்துச் சென்றார். சுஷாந்த், ரியா சக்ரவர்த்தியை குடும்பத்தின் ஒரு பகுதி என்று விவரித்துள்ளார், எனவே ரியாவின் செலவுகள் சுஷாந்தின் அறிவுறுத்தலின் பேரில் நடந்தது என்பதால் இதில் எந்தவிதமான நிதி மோசடியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ-யின் இந்த அறிக்கையை, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே. சிங் கண் துடைப்பு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சிபிஐயின் இந்த அறிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+