பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த வாட்ச்மேன்.. லேடீஸ் ஹாஸ்டல் ஓனர் உட்பட 2 பேர் கைது
மும்பையில் லேடீஸ் ஹாஸ்டலில் ரகசிய கேமரா வைத்த 2 பேர் கைது
மும்பை: லேடீஸ் ஹாஸ்டலில் ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ள விவகாரம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில்தான் சென்னை ஆதம்பாக்கத்தில் பெண்கள் விடுதியில் ரகசிய காமிரா வைத்திருந்ததாக சஞ்சீவ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்த ஷாக் இன்னும் அடங்காத நிலையில், மும்பையில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்துள்ளது.

இளம்பெண்கள்
மும்பை எப்பவுமே பரபரப்பான ஒரு நகரம். பல்வேறு மாநிலங்களிலுந்து இளம் பெண்கள் பலர் தங்கி படித்தும், வேலைக்கும் சென்றும் வருகிறார்கள். இவர்களுக்கு உதவியாக இருப்பது லேடீஸ் ஹாஸ்டல்தான்.

ரகசிய காமிரா
அப்படி ஒரு ஹாஸ்டல்தான் கிர்கான் பகுதியிலும் உள்ளது. இந்த விடுதியில் ரகசிய காமிரா இருப்பதை எதேச்சையாக அறிந்த பெண் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவலும் அளித்தார்.

குளிக்கும் வீடியோ
விரைந்து வந்த போலீசார் ஹாஸ்டலை பார்வையிட்டனர். அப்போது, ரகசியமாக பல இடங்களில் காமிரா பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. பாத்ரூம்களில் பெண்கள் குளிப்பதை வாட்ச்மேன் வீடியோவாக எடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

2 பேர் கைது
இதையடுத்து ஹாஸ்டல் உரிமையாளர் மற்றும் வாட்ச்மேனை போலீசார் கைது செய்தனர். பல பெண்களை ரகசியமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications