3 விதமான மக்கள் இருக்கிறார்கள்.. இஸ்ரோவிலிருந்து திரும்பிய மோடி பேச்சு.. என்ன சொன்னார் தெரியுமா?
உலகில் மொத்தம் மூன்று விதமான மக்கள் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார்.
Recommended Video
மும்பை: உலகில் மொத்தம் மூன்று விதமான மக்கள் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார். இஸ்ரோ நிகழ்வு தனக்கு அதை நினைவு படுத்தியது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கவில்லை. இதன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் இஸ்ரோ அதிர்ச்சி அடைந்துள்ளது. சந்திரயான் 2 இறங்கும் நிகழ்வில் நேற்று பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.
சந்திரயான் நிலவில் இறங்காததால், பிரதமர் மோடி இஸ்ரோ அதிகாரிகளுக்கு ஆறுதல் கூறினார் . இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மும்பையில் மெட்ரோ ரயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

என்ன பேசினார்
மும்பையிலேயே மேக் இன் இந்தியா திட்டம் மூலம் உருவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் கோச்சுகளை அவர் திறந்து வைத்தார். அதேபோல் அவர் புதிதாக மூன்று மெட்ரோ ரயில் பாதைகளையும் திறந்து வைத்தார். அதன்பின் அவர் அங்கிருந்த அதிகாரிகள் முன்னிலை பேசினார். இதில் முழுக்க முழுக்க பிரதமர் மோடி சந்திரயான் 2 குறித்து பேசினார். அதில், நான் இஸ்ரோ விஞ்ஞானிகள் மூலம் கவரப்பட்டேன்.

என்ன நேர்த்தி
அவர்கள் மிக மிக நேர்த்தியாக, கவனமாக, அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். இரவு பகல் பாராமல் அவர்கள் கஷ்டப்பட்டு வேலை பார்த்தனர். நாம் அவர்களிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். உலகில் மொத்தம் மூன்று விதமான மக்கள் இருக்கிறார்கள். இஸ்ரோ நிகழ்வு எனக்கு அதைத்தான் நியாபகப்படுத்தியது.

மோசம்
ஒரு சில மக்கள் வாழ்க்கையில் எதையும் முயன்று பார்க்க மாட்டார்கள். தோல்வியை பார்த்து அவர்கள் பயப்படுவார்கள். இரண்டாவதாக சிலர் பிரச்னையை பார்த்தால் வேகமாக அதில் இருந்து ஓடி ஒளிந்து விடுவார்கள் . அவர்களுக்கு பிரச்சனை என்றாலே ஆகாது.

எப்படி
மூன்றாவதாக இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பிரச்சனையை தைரியமாக எதிர்கொள்வார்கள். மிகவும் உறுதியாக இருப்பார்கள். அவர்கள் கடைசி வரை முயற்சி செய்வார்கள். கடைசியில் வெற்றியும் அடைவார்கள். இஸ்ரோவில் இருப்பவர்கள் அப்படித்தான் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications