இந்திய ரயில்வேயின் பரிதாப நிலையை பாருங்க.. ஜூன் 4ஆம் தேதி எல்லாம் தலைகீழாக மாறும்: ஜெய்ராம் ரமேஷ்
மும்பை: மும்பையில் கடந்த திங்கட்கிழமை புழுதி புயலுடன் மழை பெய்ததில் பலர் உயிரிழந்தனர். அன்றைய தினம் மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பயணிகள் பலர் கடும் அவதியுற்றனர். இதனை குறிப்பிட்டு இந்திய ரயில்வே குறித்து காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த திங்கட்கிழமை கடுமையான புழுதிப்புயல் வீசியது. இதனால் ராட்சத இரும்பு பேனர் ஒன்று கழன்று பெட்ரோல் பங்க் மீது விழுந்தது. இதில், மழைக்காக ஒதுங்கியிருந்த 60 பேர் காயமடைந்தனர். தற்போது வரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மறுபுறம் அன்றைய தினம் மும்பை புறநகர் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. பலர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ரயில் நிலையத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறினால் போதும் என்கிற நிலையில் இருந்தனர். குறிப்பாக தானே ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் பலர் லேசான காயமடைந்திருந்தனர். போதுமான ரயில் இல்லாததுதான் இந்த நெரிசலுக்கு காரணம் என்று சொல்லப்பட்டது.
இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவிய நிலையில், "மக்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்படுகிறார்கள்" என சிலர் கடுமையாக விமர்சித்திருந்தனர். மழை குறித்து வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தும், ஏன் போதுமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
For months, @INCIndia has been raising the sorry state of Indian Railways under 10 years of Modi’s Anyay Kaal. The Mumbai Locals have been among the worst affected.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) May 15, 2024
A video from Thane Station on May 13, showing stampede-like conditions, lays bare the chronic underinvestment in… https://t.co/wevb19bwd0 pic.twitter.com/yeiuriUSYC
இப்படி இருக்கையில், இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
“மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில், ரயில்வே துறையின் பரிதாப நிலை குறித்து கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் குரலெழுப்பி வருகிறது. சமீபத்தில் மும்பை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மே 13ம் தேதி தானே ரயில்வே ஸ்டேஷனிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ நெரிசலை காட்டுகிறது.
ரயில்வே துறையில் நீண்ட காலமாக முதலீடு செய்யப்படாமல் இருப்பதையே இது காட்டுகிறது. மும்பை நகர்ப்புற போக்குவரத்து திட்டம் இந்த அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் அக்கறையின்மையால் தாமதமாகி வருகின்றன. ரயில்வே அமைச்சர் புல்லட் ரயில்கள் குறித்த ஏதோ கற்பனை உலகில் வாழ்கிறார். இந்த உண்மையை சாமானிய இந்தியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஜூன் 4 அன்று, இந்திய கூட்டணி, நமது ரயில்வேயை மீட்டெடுப்பதை தேசிய முன்னுரிமையாக மாற்றும்” என்று கூறியுள்ளார்.
இந்தியன் ரயில்வே குறித்து கடந்த காலங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வந்திருக்கின்றன. குறிப்பாக 296 பேரை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்து இந்தியன் ரயில்வே வரலாற்றில் இது மிக மோசமான ரயில் விபத்தாக பார்க்கப்பட்டது. இதற்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன.
ஆனால், சம்பவ இடத்தை பார்வையிட்ட மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இனி இதுபோன்று நடக்காது என்று உறுதியளித்தார்.
இவர் உறுதியளித்து 6 மாதத்திற்குள் மற்றொரு கோர விபத்து ஆந்திராவில் நடந்தது. ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகாபள்ளி-அலமாண்டா பகுதியில், பலாசா பயணிகள் ரயிலின் மீது ராயகடா எக்ஸ்பிரஸ் மோதியது. இதில் 13 பேர் வரை உயிரிழந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியிருந்தது. ஆனால், அரசு தரப்பில் 8 பேர் மட்டுமே உயிரிழந்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டது.
இது தவிர ஆங்காங்கே சிறு சிறு விபத்துகள் நடந்தன. தமிழ்நாட்டில், கடந்த டிசம்பர் மாதம் பரனுர் ரயில் நிலையத்திற்கும் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் திடீரென தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால் செங்கல்பட்டு-சென்னைக்கு இடையே ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. தென் மாவட்டங்களிலிருந்து வந்த ரயில்கள் அனைத்தும் செங்கல்பட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனை சரி செய்ய 24 மணி நேரத்திற்கும் மேல் ஆனது.
மற்றபடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்படும் ரயில்கள் அவ்வப்போது தடம் புரண்டு விபத்தில் சிக்குகின்றன. பணிமனைக்கு செல்லும் ரயில் என்பதால், அதில் பயணிகள் இருக்கவில்லை. எனவே உயிர் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், ரயில் சேவைகள் சில மணி நேரம் வரை பாதிக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோல சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் நம்பள்ளி ரயில் நிலையத்தில் இன்று தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் 10 பேர் வரை காயமடைந்தனர். கடந்த ஜனவரி 10ம் தேதி பிற்பகல் சென்னை எழும்பூரில் ரயில் என்ஜின் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இந்த பின்னணியில்தான் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் கூர்மையடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு பம்பர் பரிசு.. கிலோமீட்டருக்கு இனி இவ்வளவு பணமா? முழு விபரம் உள்ளே -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications