சர்ச்சையில் இளம்பெண் ஐஏஎஸ்.. பூஜாவை பயிற்சி பணியில் இருந்து விடுவித்த மகாராஷ்டிரா! அடுத்த என்ன?
மும்பை: சர்ச்சையில் சிக்கிய இளம்பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரை அனைத்து வகையான பயிற்சி பணிகளில் இரந்து விடுவித்து மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி வரும் 23ம் தேதிக்குள் பூஜா கேத்கர் முசோரியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஜா கேத்கர்.. கடந்த சில நாட்களாக நாம் அதிகம் கேள்விப்படும் பெயராக உள்ளது. இவர் யார் என்றால் இளம் பெண் ஐஏஎஸ் அதிகாரி. யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் பயிற்சி ஐஏஎஸ்ஸாக சேர்ந்தார். புனே மாவட்ட உதவி கலெக்டராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் அவர் அந்த பொறுப்பில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தான் அவர் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்க தொடங்கினார். அதாவது, அவர் தனது சொந்த ஆடி காரில் சைரன் வைந்தார். மேலும் மகாராஷ்டிர அரசு என ஸ்டிக்கரும் ஒட்டினார். இதுதவிர பயிற்சி பணியில் இருக்கும் ஐஏஎஸ்ஸாக இருந்தாலும் கூட அவர் பிற வசதிகளை கேட்டுள்ளார்.
அதாவது தனக்கு என்று தனி அலுவலகம், போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார். இவரது இந்த செயல்பாடு பற்றி தலைமை செயலாளருக்கு புகார் சென்றது. அதன்பிறகு அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவர் வாஷிம் பகுதிக்கு மாற்றப்பட்டார். அங்கு சூப்பர்நியூமரரி உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் இன்னொரு சர்ச்சையில் அவர் சிக்கினார்.
அதாவது பூஜா கேத்கர் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஓபிசி பிரிவை சேர்ந்தவர் எனவும், பார்வை மற்றும் மனஇறுக்க பிரச்சனை உள்ளதாக பிடபிள்யூபிடி எனும் மாற்றுத்திறனாளிகளின் கோட்டாவில் பணிக்கு சேர்ந்த நிலையில் அவரது தந்தை முன்னாள் அரசு அதிகாரி என்பது, அவருக்கு பலகோடியில் சொத்து இருப்பதும் தெரியவந்தது. இதனால் பூஜா கேத்கர் ஏமாற்றி ஐஏஎஸ் பணியில் சேர்ந்ததாக சந்தேகம் எழுந்தது.
இதுபற்றி விசாரணை நடத்த மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் கூடுதல் செயலாளர் மனோஜ் திவிவேதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணையை தொடங்கி உள்ளது. இத்தகைய சூழலில் தான் சர்ச்சையில் சிக்கி உள்ள பூஜா கேத்கர் பயிற்சி பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மகாராஷ்டிரா அரசின் கூடுதல் தலைமை செயலாளர் நிதின் கேத்ரி பூஜா கேத்கருக்கு எழுதியுள்ள கடித்தில், , ‛‛முசோரி லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் சார்பில் உங்களின் மாவட்ட பயிற்சி திட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிற நடவடிக்கைகளுக்காக திருப்பி அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மகாராஷ்டிரா மாவட்ட பயிற்சி திட்டத்தின் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முசோரி லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷனுக்கு ஜுலை 23ம் தேதிக்குள் செல்ல வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications