கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் உலகம்..51,17,05,590 பேர் குணமடைந்தனர் - 63,27,925 பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனாவால் 53,85,98,771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 51,17,05,590 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 63,27,925 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 53,85,98,771 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 51,17,05,590 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 63,27,925 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 36,702 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது.
ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. தற்போது XE என்ற புதிய வகைக் கொரோனா பரவி வருகிறது.

கொரோனா பரவல்
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 544,912 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 53,85,98,771 பேராக உயர்ந்துள்ளது.

51,1,705,590 பேர் மீண்டனர்
கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 401,480 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 51,1,705,590 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் 1,353 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களளின் மொத்த எண்ணிக்கை 63,27,925பேராக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பாதிப்பு அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. 9,743 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,32,07,265 பேராக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் பாதிப்பு
அமெரிக்காவில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 68,253 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,70,94,528 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மொத்தம் 1,035,239 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா 4வது அலை
ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நூறு கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் 4வது அலை உருவாக வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளதால் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications