உலகம் முழுவதும் நீளும் கொரோனாவில் கோர நாக்குகள்..57 கோடி பேர் பாதிப்பு, 64 லட்சம் பேர் மரணம்
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 8,58,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 7,11,748 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.
மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 8,58,884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 7,11,748 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 57 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 லட்சம் உயிர்களை காவு வாங்கியுள்ளது கொரோனா வைரஸ்.
உலகம் முழுவதும் கொரோனாவால் மொத்தம் 57,34,91,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 54,33,50,953 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 64,00,647 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 40,848 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 57 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் கொரோனா டெல்டா, டெல்டா ப்ளஸ் அதிக அளவில் மக்களின் உயிரை காவு வாங்கியது. ஓமிக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருந்தாலும் அதிக அளவில் உயிர் பலி ஏற்படவில்லை. கொரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 8,58,884 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 57,34,91,335 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் ஒரே நாளில் 7,11,748 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 54,33,50,953 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் உலகம் முழுவதும் 1,743 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 64,00,647 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,01,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,21,33,848 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மொத்தம் 10,51,845 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 49,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 3,35,55,526 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசில் முழுவதும் மொத்தம் 6,76,826 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 74,348 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல இத்தாலியிலும் நாட்டிலும் கொரோனாவால் 71,075 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் கொரியாவில் ஒரே நாளில் 68,579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓமிக்ரான் வைரஸ் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா எப்போது ஒழியும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. எனவே கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் அவசியம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உலக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications