‛‛துணை முதல்வர் பதவி வேண்டாம்’’.. பட்னாவிஸ் திடீர் ராஜினாமா! உபியில் பாஜக தோற்றதற்கு பொறுப்பேற்பு
மும்பை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. எனவே இந்த பின்னடைவுக்கு பொறுப்பேற்று மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்ய இருக்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும், 7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி 6ம் கட்டமாகவும், ஜூன் 1ம் தேதி 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.

இந்நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்தன. தொடக்கம் முதல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும், கடும் போட்டி நிலவியது. இறுதியாக பாஜக கூட்டணி 293 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.
இதில் மிகவும் கவனம் பெற்ற மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருந்தது. லோக்சபா தேர்தலில் வெற்றி பெருபவர்களுக்கு உத்தரப் பிரதேசத்தை முழுமையாக கைப்பற்றுவது அவசியம். ஏனெனில், நாட்டில் அதிக தொகுதிகளை (80 தொகுதிகள்) கொண்ட ஒரே மாநிலம் இது மட்டும்தான். எனவே உத்தரப் பிரதேசத்தை முழுமையாக வசப்படுத்தும் கட்சிகளுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அந்த வகையில் உ.பி தேர்தல் முடிவுகள் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இங்கு பாஜக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. இது அக்கட்சியின் தேசிய தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் உ.பியில் இதற்கு முன்னர் எந்த கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது கிடையாது. ஆனால், கடந்த இரண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றிருக்கிறார். எனவே இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு 80/80 கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த வெறும் 33 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. மறுபுறம் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இந்தியா கூட்டணி பலத்தை சேர்த்தால் 47 தொகுதிகள் வருகிறது. இது பாஜகவுக்கு பேரிடி.
எனவே இந்த தோல்விக்கு பொறுப்பெற்று உத்தரப் பிரதேச பாஜக மேலிட பொறுப்பாளராக இருந்து வந்த மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications