இப்படியே பேசிக்கொண்டிருந்தால்.. ராகுல் காந்தி தெருவில் நடக்க முடியாது ஜாக்கிரதை.. ஷிண்டே மிரட்டல்
மும்பை: ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது, மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை என்று கூறியிருந்தார். இதனிடையே ராகுல் காந்தியின் பேச்சை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கடுமையாக விமர்சித்துள்ளார்
கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் வைத்த அனைவரும் ஒரே போல இருப்பதாகச் சொன்னதுடன், அத்துடன் சர்ச்சை கருத்து ஒன்றைத் தெரிவித்தார்.
இது அப்போதே மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியது. ஒட்டுமொத்த மோடி சமூகத்தையே ராகுல் காந்தி இழிவுபடுத்திவிட்டதாக ஆளும் தரப்பைச் சேர்ந்த பலரும் அப்போதே விமர்சித்தனர்.

ராகுல் காந்தி
மேலும், குஜராத் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி என்பவர் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மீது வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், சில நாட்களுக்கு முன்பு இதில் தீர்ப்பளிக்கப்பட்டது. ராகுல் காந்தியைக் குற்றவாளியாக அறிவித்த மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்பதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவர் இப்போது எம்பி பதவியை இழந்தார்.

விளக்கம்
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 102(1)(இ)யின் விதிகளின்படி, தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து, அதாவது மார்ச் 23, 2023 முதல் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இன்று வயநாடு தொகுதி காலியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். குறிப்பாக அதானி விவகாரம் குறித்துப் பேசியதாலேயே தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.

ஏக்நாத் ஷிண்டே
மேலும், ராகுல் காந்தியின் லண்டன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் தரப்பு வலியுறுத்தி வரும் நிலையில், மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று ராகுல் காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், "மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை.. நான் காந்தி.. காந்தி எப்போதும் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்க மாட்டோம்" என்றும் கூறியிருந்தார். இதனிடையே சாவர்க்கரை பற்றி ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கடும் பதிலடி கொடுத்துள்ளார். இதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

சாவர்க்கர் பற்றி என்ன தெரியும்
மகாராஷ்டிர சட்டசபையில் இன்று பேசிய அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "சாவர்க்கர் மகாராஷ்டிராவின் தெய்வம் மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஒரு ரோல் மாடல் மாதிரி.. அப்படியிருக்கும் போது ராகுல் காந்தி அவரை அவதூறாகப் பேசியுள்ளார். இதற்காக ராகுல் காந்தியை எப்படி விமர்சித்தாலும் அது குறைவாகவே இருக்கும். மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் இல்லை என்று அவர் கூறியுள்ளார். சாவர்க்கரைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார்? இதற்காகவே அவர் தண்டிக்கப்பட வேண்டும்.

காங்கிரஸ் கொண்டு வந்த சட்டம்
காங்கிரஸே இயற்றிய சட்டத்தின் மூலமே ராகுல் காந்தி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சட்டத்தில் முதலில் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் ஒன்றும் இவர் இல்லை. ஏற்கனவே லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பலரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அப்போதெல்லாம் இதுபோல யாரும் எதுவும் சொல்லவில்லை.. இப்போது மட்டும் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது என்று பலரும் சொல்வது ஏன் என்று எனக்குப் புரியவே இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

தெருவில் நடக்க முடியாது
சூரத் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ராகுல் காந்தியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, "ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்தது மட்டுமில்லை.. ஒட்டுமொத்த ஓபிசி சமூகத்தையும் அவதூறாகப் பேசியிருக்கிறார். அவர் தொடர்ந்து இதேபோல பேசி வருகிறார்.. இது நல்லதற்கு இல்லை.. தொடர்ந்து இதேபோல பேசிக் கொண்டிருந்தால்.. அவரால் தெருவில் நடக்கக் கூட முடியாது. இதை நான் அவருக்குச் சொல்ல விரும்புகிறேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications