மருத்துவமனை கூட்டி சென்ற.. ஆட்டோகாரருக்கு சைஃப் அலிகான் எவ்வளவு தந்தார் தெரியுமா?
மும்பை: திருடன் குத்தியதால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடிகர் சைஃப் அலிகான் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தன்னை ஆட்டோவில் அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுனருக்கு அவர் எவ்வளவு தந்தார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன .
நடிகர் சைஃப் அலிகானின் மும்பை வீட்டில் 4 நாட்களுக்கு முன் நடந்த கொள்ளை முயற்சியில் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டார். அவர் வீட்டிற்குள் புகுந்த திருடன்.. சைஃப் அலிகானை கத்தியால் குத்தி உள்ளார். சைஃப் தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தபோது, திருடன் ஒருவர் சயீஃப் வீட்டிற்குள் புகுந்து உள்ளார். அப்போது சைஃப் வீட்டு வேலைக்கார பெண் அந்த திருடன் உடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். வெளியே போ வெளியே போ என்று கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்த சத்தம் கேட்டு சைஃப் எழுந்து கீழே வந்துள்ளார். இதையடுத்து சைஃப் அலிகானும் அந்த திருடன் உடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். திருடனை தடுக்க சைஃப் அலிகான் முயன்று உள்ளார். இந்த வாக்கு வாதம் அதன்பின் கைகலப்பாக மாறி உள்ளது. இந்த மோதலில் அந்த திருடன் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். மறைத்து வைத்திருந்த கத்தியை சுழற்றி சரமாரியாக அந்த திருடன் தாக்கி உள்ளார். 6 முறை தாக்கிவிட்டு சைஃப் அலிகான் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
ஆட்டோ ஓட்டுனர்:
இந்த சம்பவத்திற்கு பின் அவர் மருத்துவமனைக்கு செல்ல கார் ஓட்ட ஆள் இல்லை. டிரைவர்கள் வீட்டில் இல்லை என்பதால் மகனை வைத்துக்கொண்டு ஆட்டோவில்தான் சென்று இருக்கிறார். அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு 11500 ரூபாயை அவர் வழங்கி உள்ளார். அவசரத்தில் உதவிய காரணத்தால் அவ்வளவு தொகையை வழங்கி உள்ளார்.
சைஃப் அலி கான் மும்பையின் லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசிதாரர் ஆக இருக்கிறார். இந்த நிறுவனத்தில் சைஃப் அலி கான் தனது சிகிச்சைக்காக ரூ. 35.95 லட்சத்தை கோரியுள்ளார். நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் காப்பீட்டாளர் நிறுவனம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட ரூ. 25 லட்சத்தை முதல் கட்டமாக வழங்கி உள்ளது.
இது நோ கேஷ் வகை காப்பீடு என்பதால் நேரடியாக மருத்துவமனையில் பணம் தரப்பட்டுவிட்டது. மீதம் உள்ள தொகை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படும் முன் மருத்துவமனைக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
என்ன நடந்தது?
இந்த சம்பவம் நடந்த போது சைஃப் அலிகான் வீட்டில் அவரின் மனைவி கரீனா கபூர் தூங்கிக்கொண்டு இருந்ததாக செய்திகள் வந்தன. ஆனால் அதில் உண்மை இல்லை. கரீனா கபூர் அப்போது வீட்டிலேயே இல்லை.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, கரீனா கபூர் தனது சகோதரி கரிஷ்மா கபூர் மற்றும் தோழிகளான சோனம் கபூர் மற்றும் ரியா கபூர் ஆகியோருடன் வேறு இடத்தில் இருந்துள்ளார். அங்கே இவர்கள் கேர்ள்ஸ் பார்ட்டி நடத்திக்கொண்டு இருந்தனர். வீட்டில் சைஃப் அலிகான் தவிர வேறு யாரும் இல்லை.
இதனால் வேறு விதமான அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் இன்ஸ்டாகிராமில் கரீனா கபூர் தனது பார்ட்டி பற்றி போஸ்ட் செய்து இருந்தார். கரிஷ்மா கபூர், சோனம் கபூர் மற்றும் ரியா கபூர் ஆகியோருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தைப் கரீனா கபூர் பகிர்ந்து இருந்தார். கொள்ளையடிக்கப்பட்ட நேரத்தில் கரீனா வீட்டில் இருந்தாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று முதலில் செய்திகள் வந்தன.
ஆனால் கரீனா கபூர் வீட்டிலேயே இல்லை என்பது உறுதியாகி உள்ளது. சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற நபர், திடீரென அவரை தாக்கியுள்ளார். சைஃப் அலி கான் இப்போது மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், கரீனா கபூர் இது தொடர்பாக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் பொறுமையாக இருக்குமாறும், யூகங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.. இந்த சம்பவம் தொடர்பாக வதந்திகளை தவிர்க்குமாறும் கரீனா கபூர் தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளார். இதுவரை வெளியான தகவலின் படி சைஃப் அலி கானுக்கு நேர்ந்த காயத்தில் 2 காயங்கள் தீவிரமானது ஆழமானது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications