பிரதமர் மோடி மாஸ்க் போடவில்லை.. அதனால் நானும் போடவில்லை.. சிவசேனா எம்பியின் குபீர் விளக்கம்
சஞ்சய் ராவத் பிரதமர் மோடியை கிண்டடித்துள்ளார்
மும்பை: பிரதமர் மோடி மாஸ்க் அணிவது கிடையாது.. அவர் இந்த நாட்டின் தலைவர் என்பதால், நானும் மோடியை பின்பற்றுகிறேன் என்று எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் தற்போது கொரோனாவைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்து கொண்டிருக்கிறது.. குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் வேகமாக அதிகரித்துள்ளது.
அம்மாநிலம் முழுவதும் மொத்தம் 5,368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. குறிப்பாக மும்பையில் மட்டும் 3,671 பேருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது..

மகாராஷ்டிரா
நேற்றைய தினம் ஒரே நாளில் 198 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.. மும்பையில் மட்டும் 190 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது... அந்த வகையில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் பாலசாகேப் தொராட்டுக்கும் கொரோனா பாசிட்டிவ் உறுதியாகி உள்ளது... இது அரசியல் கட்சியினரிடையே பீதியை தந்து வருகிறது...

நாசிக்
இந்நிலையில், சிவசேனாவின் சீனியர் தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத் நாசிக்கில் நடந்த நிகழச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியபோது, மாஸ்க் போடாமல் இருந்தார்.. நிகழ்ச்சி முடிந்ததும் இதை பற்றி செய்தியாளர்கள் ஏன் மாஸ்க் போடவில்லை என்று கேட்டனர்.. அதற்கு சஞ்சய் ராவத், "பிரதமர் மோடி, நாட்டு மக்கள் எல்லாரையும் மாஸ்க் அணியுமாறு சொல்கிறார்.. ஆனால் அவரே மாஸ்க் அணிவது கிடையாது.. ஆனால், மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மாஸ்க் அணிகிறார்...

தலைவர்
மோடி இந்த நாட்டின் தலைவர் என்பதால், நானும் மோடியை பின்பற்றுகிறேன்... பொதுமக்களும் மாஸ்க் அணிவதில்லை. இருந்தாலும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அனைவருமே உஷாராக இருக்க வேண்டும். இப்போது தடை உத்தரவுகள் அமலில் உள்ளது... இது நிச்சயம் பொருளாதார வளா்ச்சியை பாதிக்கும் என்றாலும், பகல் நேரத்தில் அதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இருக்க கூடாது என்று நினைக்கிறேன்..

பாஜக
சுப்ரியா சுலே, அவரது கணவர், தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ பிரஜக்த் தான்புரே, வர்ஷா கெய்க்வாட் ஆகியோருக்கு கொரோனாவைரஸ் கண்டறியப்பட்டுள்ளத.. அதனால் பொது நிகழச்சிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.. எம்பியின் இந்த பேச்சு பாஜகவில் எரிச்சலை கிளப்பி விட்டு வருகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications