"ஓபிசி+ எஸ்சி+ விவசாயிகள்.." பாஜகவின் மிஷன் மகாராஷ்டிரா! மொத்தம் 150+ முடிவுகளுக்கு கிரீன் சிக்னல்
மும்பை: மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குக் கடந்த சில வாரங்களில் சுமார் 150+ முடிவுகளுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்றைய தினம் கூட ஓபிசி சமூகத்தினரைக் கவரும் வகையில் மகாராஷ்டிர அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், இவை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் இப்போது ஷிண்டே தலைமையிலான பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி கூட்டணி ஆட்சி இருக்கிறது. அங்கு அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை கூட்டம்: தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அம்மாநில அமைச்சரவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில வாரங்களில் பல முறை அம்மாநில அமைச்சரவை கூடியுள்ள நிலையில், சுமார் 150+ முடிவுகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இது தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நேற்றைய தினமும் அமைச்சரவையில் ஓபிசி சமூகத்தினரைக் கவரும் வகையில் மகாராஷ்டிர அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
ஓபிசி: அதாவது இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு கிரீமி லேயர் நடைமுறை பின்பற்றப்படும். அதாவது ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீட்டுப் பலனைப் பெற குடும்பத்தின் ஆண்டு வருமானம் குறிப்பிட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும் இதை கீரிமி லேயர் எனக் குறிப்பிடுவார்கள். இந்த குறிப்பிட்ட தொகைக்குக் கீழ் ஒருவருக்கு ஆண்டு வருமானம் வந்தால் அதை நான் கீரிமி லேயர் என்பார்கள். அவர்களுக்கு வழக்கம் போல இட ஒதுக்கீடு பலன்கள் கிடைக்கும். அதேநேரம் இந்த ஆண்டு வருமானத்தைத் தாண்டினால் அவர்கள் கீரிமி லேயராக கருதப்பட்டு அவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படாது.
அதே ஓபிசி சமூகத்தில் பொருளாதார ரீதியாக முன்னேறாத பிரிவினருக்கு வாய்ப்பு தரவே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே ஓபிசி ஆண்டு வருமான உச்சவரம்பு இப்போது ரூ.8 லட்சமாக இருக்கும் நிலையில், அதை ரூ.15 லட்சமாக உயர்த்த மகாராஷ்டிர அமைச்சரவை பரிந்துரை அளித்துள்ளது. இருப்பினும், இதை முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது. எனவே, மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டமே உச்சவரம்பை உயர்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்சி பிரிவினர்: மேலும், மகாராஷ்டிர மாநில அட்டவணை சாதி ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குவதற்கான அவசரச் சட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த அவசரச் சட்டம் அடுத்த சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் 27 பதவிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அங்குக் கடந்த 3 வாரங்களில் நடக்கும் 4வது அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த அமைச்சரவை கூட்டங்களில் 40க்கும் மேற்பட்ட முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சிறிய சமூகங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன் சார்ந்தே இந்தக் கூட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு தவிரவும் தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்காகப் போரிவலி அரசு நிலத்தை வழங்க அனுமதி, பாந்த்ரா அரசு காலனியில் வசிக்கும் ஊழியர்களுக்கு வீடு, ஜல்னா- நாந்தேட் விரைவுச்சாலை என்று பல்வேறு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள்: முன்னதாக கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் சோயாபீன் மற்றும் பருத்தி விவசாயிகளைக் கவரும் வகையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதேபோல அரசு உதவி திட்டங்களைப் பெற விவசாயிகளின் உச்சவரம்பும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 150 முடிவுகள்: கடந்த மாதம் இறுதியில் மகாராஷ்டிர அமைச்சரவை இரண்டு முறை கூடியது. அதில் ஒரு கூட்டத்தில் 35 முடிவுகளுக்கும், மற்றொரு கூட்டத்தில் 36 முடிவுகளுக்கும் ஒப்புதல் தரப்பட்டது. அதேபோல கடந்த வாரம் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாளில் 40 முடிவுகளுக்கு ஒப்புதல் தரப்பட்டன. கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் பெரும்பாலும் உள்கட்டமைப்பு ரீதியான முடிவுகளுக்கு ஒப்புதல்கள் தரப்பட்டன.
இந்தச் சூழலில் தான் இப்போது ஓபிசி பிரிவினரைக் குறிவைத்துப் பல முடிவுகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இப்படிக் கடந்த ஒரு சில வாரங்களில் மட்டும் மகாராஷ்டிர அமைச்சரவை 150+ திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அங்கு அடுத்த மாதம் நடக்கும் தேர்தலில் இது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்ப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications