எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே சொன்னது என்ன? பரபரப்பில் சிவசேனா..!
மும்பை: அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, நிச்சயம் கட்சியில் இணைவார் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Recommended Video
மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன.ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ், சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

இதனைத்தொடர்ந்து அண்மையில் மகாராஷ்டிராவில் நடந்த மேலவை தேர்தலில் பாஜகவின் 5 எம்எல்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். இதில் சிவசேனா எம்எல்ஏக்களின் ஆதரவு இன்றி பாஜக 5 எம்எல்சி இடங்களை பிடித்து இருக்க முடியாது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென கட்சி கொறடாவாகவும், அமைச்சராகவும் உள்ள சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அங்கு அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். அவர் 35க்கும் மேற்பட்ட ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் அசாம் மாநிலத்தில் முகாமிட்டுள்ளார்.
இதனிடையே மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதால் சிவசேனா ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டேவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து சிவசேனா எம்எல்ஏ-க்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே நிச்சயம் கட்சிக்கு மீண்டும் வருவார். சிலர் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் ஏற்கனவே அவர்களுடன் நாம் கைகோர்த்திருந்தபோது, ஏராளமான பிரச்னைகளை சந்தித்துள்ளோம். அதனால் நாம் ஏன் மீண்டும் அவர்களோடு இணைய வேண்டும் என்று பேசியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications