சென்னை, மும்பை, டெல்லி.. 40+ சொத்துகள் ஒரே நாளில் முடக்கம்.. அனில் அம்பானிக்கு சிக்கல் மேல் சிக்கல்
டெல்லி: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிரான வழக்கில் சுமார் ரூ. 3,084 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாகப் பறிமுதல் செய்துள்ளது. இதில் மும்பையின் பாலி ஹில்லில் உள்ள ஒரு வீடு, டெல்லியில் உள்ள ரிலையன்ஸ் சென்டர் மற்றும் எட்டு நகரங்களில் உள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்கள் அடங்கும்.
இந்தியாவின் மிக பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ். அதன் நிறுவனர் திருபாய் அம்பானி மறைவுக்குப் பிறகு, அவருடைய மகன்களான அனில் அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி இடையே நிறுவனங்களை நடத்துவது தொடர்பாக மோதல் எழுந்தது. இதையடுத்து இருவரும் அம்பானியின் நிறுவனங்களைப் பிரித்துக் கொண்டனர்.

அனில் அம்பானி
அப்போது அனில் அம்பானிக்கு டெலிகாம், பைனான்ஸ், மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை கிடைத்தது. இருப்பினும், அவரால் தனது நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. அவரது பல்வேறு நிறுவனங்களும் நிதி நெருக்கடியில் சிக்கின. மேலும், அவர் மீது பல்வேறு நிதி முறைகேடு புகார்களும் எழுந்தன. பல ஆண்டுகளாகவே அவர் மீது இந்த வழக்குகள் நடந்து வந்தன. இதற்கிடையே அவர் மீதான வழக்குகள் இப்போது வேகமெடுத்துள்ளன.
ரூ.3,084 கோடி சொத்துகள்
இந்தச் சூழலில் தான் சுமார் ரூ.3,084 கோடி மதிப்பிலான அவரது சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அக்டோபர் 31ம் தேதி இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதன்படி சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்தச் சொத்துக்கள் தற்காலிகமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லி, நொய்டா, காஜியாபாத், மும்பை, புனே, தானே, ஹைதராபாத், சென்னை மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி ஆகிய பகுதிகளில் குடியிருப்பு யூனிட்கள், அலுவலக வளாகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட் மூலம் திரட்டப்பட்ட நிதியைத் திசைதிருப்பி, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாகச் சொல்லித் தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
புகார் என்ன!
2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ. 2,965 கோடியும், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.2,045 கோடியும் யெஸ் வங்கி முதலீடு செய்திருந்தது. 2019 டிசம்பரில் இவை வாராக்கடனாக மாறி, இந்த இருநிறுவனங்களிலும் முறையே ரூ. 1,353.50 கோடி மற்றும் ரூ. 1,984 கோடி நிலுவையில் இருந்தன.
நிதி மோசடி
ரிலையன்ஸ் நிப்பான் மியூச்சுவல் ஃபண்ட் நிதியை நேரடியாக அனில் அம்பானி குழுமத்தில் முதலீடு செய்வது செபி விதிமுறைகளின்படி தடை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதையும் தாண்டி, பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிதி, யெஸ் வங்கியின் மூலம் மறைமுகமாக அனில் அம்பானியின் நிறுவனங்களுக்குச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது. அது தொடர்பாகவே இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை
இந்த விசாரணையில் அமலாக்கத் துறை பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளது. உரிய சோதனை எதுவும் இல்லாமல்.. சில சமயம் கடன் விண்ணப்பம் வருவதற்கு முன்பே கூட கடன் வழங்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. பல செக்யூரிட்டி ஆவணங்கள் காலியாகவோ அல்லது தேதி கூட குறிப்பிடப்படாமல் இருந்தன.. மேலும் கடன் கோரி விண்ணப்பித்த பல நிறுவனங்களுக்கு முறையான பிஸ்னஸ் கூட இல்லை என்பதும் தெரிய வந்தது.
அதேபோல ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிரான மோசடி வழக்குகளிலும் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. ரூ. 13,600 கோடிக்கு மேல் கடன் திசை திருப்பப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications