அடுக்குமாடி குடியிருப்பு லிப்ட் கதவுக்கு இடையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு.. மும்பையில் சோகம்
மும்பை: மும்பை தாராவியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் கதவுகளுக்கு இடையே சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை தாராவியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு லிப்டில் சென்ற 5 வயது சிறுவன் ஹுசைஃபா லிப்டின் வெளி மற்றும் உள் கதவுகளுக்கு இடையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக ஷாஹு நகர் போலீசார் தற்செயலான மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ஏதாவது அலட்சியம் இருந்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

அடுக்குமாடி குடியிருப்பு
மும்பை தாராவியின் கிராஸ் ரோட்டில் உள்ள கோஸி ஹவுசிங் சொசைட்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் 4வது மாடியில் முகமது ஹுசைஃபா சர்பராஸ் ஷேக் என்ற ஐந்து வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

நான்காவது மாடி
நேற்று மதியம் 12:43 மணிக்கு சிறுவன் ஹுசைஃபா தரை தளத்தில் இருந்து நான்காவது மாடியில் தனது வீட்டிற்கு தனது அக்கா மற்றும் தங்கையுடன் லிப்டில் ஏறினார். லிப்ட் நான்காவது மாடியை அடைந்ததும், சகோதரிகள் அவருக்கு முன் வெளியேறினர்.

கதவுக்கு இடையில்
அப்போது சிறுவன் முகமது ஹுசைஃபா சர்பராஸ் ஷேக், கடைசியாக லிப்டில் இருந்து வெளியே வந்து, இரும்பு கதவை மூடிக்கொண்டிருந்தார். அப்போது வெளிப்புறம் இருந்த மரக் கதவு திடீரென சிறுவன் ஹுசைஃபா மீது மூடியது. இரண்டு கதவுக்கும் இடையில் உள்ள இடைவெளியில் சிறுவன்.சிக்கி கொண்டான்.

நசுங்கி மயக்கம்
சிறுவன் ஹுசைஃபா உதவிக்காக கத்தி கூச்சலிட்டு வெளிப்புற மரக்கததை தட்டிக்கொண்டிந்தான். அப்போது லிப்ட் மேல் மாடிக்கு (ஐந்தாவது மாடிக்கு) திடீரென மேல்நோக்கி சென்றது. இதனால் சிறுவன் சுவர்களுக்கு இடையில் நசுங்கி மயங்கினான்.

தாய் பதற்றம்
அவரது சகோதரிகள் வீட்டிற்கு வந்தவுடன், அவர்களது தாய் அவர்களிடம் ஹுசைஃபா பற்றி கேட்டார். அவர் லிப்டில் இருப்பதாக அவர்கள் தாயிடம் சொன்னார்கள், ஆனால் லிப்ட் திரும்பியபோது அவர்கள் அவரை அங்கே காணவில்லை. பின்னர் தாயும் அக்கம் பக்கத்தினரும் குழந்தையைத் தீவிரமாக தேடத் தொடங்கினர். ஹுசைஃபா அடுக்குமாடி வளாகத்திற்கு வெளியே செல்வதை அவர் பார்க்கவில்லை என்று பாதுகாப்புக் காவலர் அவர்களிடம் கூறினார்.

குழந்தை உயிரிழப்பு
பின்னர் அவரது குடும்பத்தினர் லிப்டில் செல்லும் போது நான்காவது மற்றும் ஐந்தாவது மாடிக்கு இடையில் சுவரில் ரத்தம் இருப்பதைக் கவனித்தனர். தரை தளத்தில் உள்ள லிப்ட் குழாயில் அசைவற்ற நிலையில் ஹுசைஃபா காணப்பட்டார். அவரை மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தாராவி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications