கொட்டியது பருவமழை.. முதல் நாளே நீரில் தத்தளிக்கும் மும்பை.. பஸ், ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு
மும்பையில் பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
மும்பை: கொட்டி தீர்க்கும் கனமழையால் மும்பை நகரமே தத்தளித்து காணப்படுகிறது.. இதனால் ரயில், பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கேரளாவில் பருவமழை கடந்த 3ம் தேதி தொடங்கியது... எனவே 10ம் தேதி அதாவது இன்றைய தினம் மகாராஷ்டிராவில் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்தது.
ஆனால், ஒரு நாள் முன்னதாக நேற்றே பருவழை மும்பையில் தொடங்கி விட்டது... தானே, பால்கரில் கனமழை கொட்டி தீர்த்தது..

கனமழை
நேற்று காலை 8 மணி வரையுள்ள 24 மணி நேரத்தில் கொலாபாவில் 77.4 மி.மீட்டர், சாந்தாகுரூசில் 59.6 மிமீ மழை பெய்ததாக பதிவானது. மும்பையில் பெய்த கனமழையால், ஒரேநாளில் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.. இதனால் மக்கள் தத்தளித்துவிட்டனர்.. அதேபோல, சாலைகள், ரயில் தண்டவாளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது..

மும்பை
இதன் காரணமாக, ரயில், சாலை போக்குவரத்து வெகுவாக பாதித்தது... மும்பையில் சயான் கிங் சர்க்கிள் காந்தி மார்க்கெட், வில்லே பார்லேயில் உள்ள மிலன் சப்வே, காந்திவலி, போரிவலி, மும்ப்ரா, பவாய், ஜூகு உள்ளிட்ட பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்து காணப்பட்டன..

வழித்தடங்கள்
சயான், வில்வே பார்லே பகுதியிலும் வெள்ளம் அதிகமாக காணப்பட்டது... பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மும்பைவாசிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.. குறிப்பாக, மழையால் மும்பை சத்ரவதி சிவாஜி ரயில் முனையத்தில் இருந்து தானே, நவி, மும்பை செல்லும் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.. எனினும் மத்திய ரயில்வே வழித்தடங்களில் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டன.

சுரங்கப்பாதை
அதேபோல, மிலன், கார், அந்தேரி, மலாட் போன்ற இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகளில் 2 அடி உயர்த்துக்கு மழைநீர் தேங்கிவிட்டன.. எனவே, அவை உடனடியாக மூடப்பட்டன.. சாலைகளில் நீர் தேங்கி உள்ளதால், அவைகளை மோட்டார் பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.. இந்தசூழலில், மக்கள் யாரும் வீட்டை விட்டு அவசியிம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்ட்டுள்ளனர்..

உத்தவ் தாக்கரே
முன்னதாக, பருவழை தொடங்கியதை அடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்றைய தினம் நடந்தது.. இதில், மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளை தொடர்புகொண்டு உத்தவ் தாக்கரே பேசினார்.. மேலும் வெள்ள நீரை வெளியேற்றி, போக்குவரத்தை மறுபடியும் தொடங்க, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications