ஆஹா மேஜிக்!.. மும்பையின் தாராவியில் ஒற்றை இலக்கத்தில் தினசரி கொரோனா பாதிப்பு.. சாத்தியமானது எப்படி?
மும்பை: மும்பை தாராவியில் 2 ஆவது கொரோனா அலை கட்டுப்படுத்தப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. மிக நெருக்கமான வீடுகளை கொண்ட இந்த தாராவி மாடலை மற்ற மாநிலங்களும் செயல்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் அங்கு தொற்று வேகமாக பரவி தாாரவியே கொரோனா கிளஸ்டராக மாறியது.
இதையடுத்து அங்கு வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. தாராவியில் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை உலக சுகாதார அமைப்பே பாராட்டியது. பின்னர் டிசம்பர், இந்த ஆண்டு ஜனவரியில் அங்கு பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்தது.

கொரோனா
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வரும் நிலையில் கடந்த பிப்ரவரியில் இருந்து 2ஆவது அலையால் தாராவி மீண்டும் பாதிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் உச்சத்தில் இருந்தது. தற்போது அங்கு பாதிப்பு மீண்டும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 3, 4, பேர் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா தடுப்பூசியால்தான் தாராவியில் கொரோனாவை கட்டுப்படுத்த உதவியதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தார்கள். அது போல் தாராவி மாடல் எனும் கொரோனா நோயாளியை தேடுதல், கண்டறிதல், சோதனை செய்து உரிய சிகிச்சை அளித்தல் ஆகியவற்றை செய்ததும் கட்டுக்குள் இருக்க காரணமாக சொல்லப்படுகிறது.

தாராவியில் தொற்று குறைவு
தாராவியில் தொற்று குறைவு குறித்து மாநகராட்சி அதிகாரி கிரன் திகாவ்கர் கூறுகையில் டிசம்பர், ஜனவரி தொடக்கத்தில் பாதிப்பு குறைவாக இருந்த போதும் நாங்கள் சோதனைகளை தீவிரப்படுத்தினோம். பிப்ரவரியில் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியதும் முதல் அலையின் போதுநோய் பரவலை கட்டுப்படுத்த உதவிய தாராவி மாடலை செயல்படுத்தினோம்.

கண்டறிதல்
இதன்படி நோய் பாதிப்பு அறிகுறி உள்ளவர்களை கண்டறிய வீடு, வீடாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. மும்பையின் பல்வேறு பகுதிகளில் வேலை பார்க்கும் தாராவி மக்களுக்கு தொடர்ந்து சோதனை பரிசோதனைகள் செய்யப்பட்டன. தற்போதும் கூட 11 காய்ச்சல் கிளீனிக்குகள் மூலம் மக்களுக்கு தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

27 ஆயிரம் பேர் தடுப்பூசி
தாராவியில் ஜீரோ பாதிப்பு என வரும் வரை தொடர்ந்து சோதனை, பரிசோதனைகள் நடத்தப்படும். அதிகளவில் தடுப்பூசி போடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதுவரை 27 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்றார் அந்த அதிகாரி.












Click it and Unblock the Notifications