Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திய அம்பானி.. ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்தின் சுவாரசிய தகவல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: நம் நாட்டின் முன்னணி தொழிலதிபராக முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சசண்ட்டுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி மும்பையில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இந்த திருமணம் முடிந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

நம் நாட்டின் பெரும் பணக்காரரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது ரிலையன்ஸ் நிறுவனம் கால்வைக்காத துறையே இல்லை என்ற நிலை உள்ளது. எரிசக்தி, தொலை தொடர்பு முதல் டிஜிட்டல் உலகம் வரை பல்வேறு துறைகளை முகேஷ் அம்பானி கட்டி ஆண்டு வருகிறார். முகேஷ் அம்பானி-நீடா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற 2 மகன்களும், இஷா அம்பானி என்ற மகளும் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானியின் திருமணங்கள் கோலாகலமாக நடந்து முடிந்தன.

how-india-gets-spotlight-via-anant-ambani-and-radhika-merchant-marriage

முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழில் அதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இவர்களின் திருமண நிச்சயத்தார்த்தம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் நடந்தது. அதன்பிறகு ஒன்றரை ஆண்டுகள் திருமணத்துக்கு முந்தைய வைபவங்கள் நடந்தன. இதில் பல பிரபலங்கள் பங்கேற்றனர். உலகமே வியக்கும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3 நாட்கள் அம்பானியின் சொந்த ஊரான குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் உலக பிரபலங்கள் உள்பட சுமார் 1,200 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணம் மும்பை பாந்திரா - குர்லா காம்பளக்ஸ் பகுதியில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்சன் சென்டரில் நடக்கிறது. இருவரும் கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இன்று அவர்கள் 2வது ஆண்டு திருமண வாழ்க்கையில் என்ட்ரி கொடுக்கின்றனர்.

முன்னதாக திருமண விழாவில் அரசியல்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தலைவர்கள், பிரபலங்கள், நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடிபங்கேற்றனர். அமிதாப் பச்சன், அபிசேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், சல்மான்கான், ஷாருக்கான், அக்ஷய்குமார், தீபிகா படுகோனே, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த திருமணம் வெறும் ஆடம்பரம், கோடீஸ்வரரின் வீட்டு திருமணம் என்பதை தாண்டி இன்றும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆனந்த் அம்பானி இந்திய கலாசாரத்தை மறக்காமல் பின்பற்றியது தான். நம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பிரபலங்கள் வந்தாலும் கூட அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து புன்முருவலுடன் வரவேற்றது இன்னும் அனைவரின் கண்முன்னும் நிற்கிறது. விருந்தோம்பலில் இந்தியா எப்போதும் முன்னிலையில் உள்ள நிலையில் அதனை அப்படியே முகேஷ் அம்பானி தனது மகன் திருமணத்தில் பின்பற்றி இருந்தார்.

மேலும் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் இந்திய பாரம்பரிய முறைப்படி நடந்தது. விநாயகர் பூஜை, வேத சடங்குகளுடன் திருமணம் நடந்தது. ஹல்தி, மெஹந்தி, சங்கீத் மற்றும் கர்பா இரவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இது வடமாநிலங்களில் பின்பற்றப்படும் வழக்கமாகும். அதனை கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி தனது மகன் திருமணத்தை பின்பற்றி இருந்தார். விழா நடந்த இடத்தில் நம் நாட்டின் கட்டடக்கலையை பறைசாற்றும் வகையில் புராண சின்னங்கள் இடம்பெற்றிருந்தது.

இந்த திருமணத்தின் மூலமாக வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களும் வளர்ந்து வரும் நல்லுறவை முகேஷ் அம்பானி காட்டியிருந்தார். அதோடு ஒரே விழாவில் பன்முகத்தன்மை கொண்டவர்களை வரவழைத்து விழாவை சிறப்பாக நடத்தியது முகேஷ் அம்பானிக்கே உரித்தான திறமையாக பார்க்கப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுடன் இந்தியாவுக்கு வளர்ந்து வரும் நல்லுறவை எடுத்துக்காட்டு வகையில் இந்த விழா நடந்தது. இதுதவிர இந்த திருமணம் வெளிநாட்டு ஊடகங்களால் செய்தியாக்கப்பட்டது. அதேபோல் இணையதளங்களில் பல மில்லியன் மக்கள் பார்த்து ரசித்தனர். இப்படியாக நம் நாட்டின் கலாசாரத்தை மொத்த உலகத்துக்கும் எடுத்துக்காட்டியிருந்தார்முகேஷ் அம்பானி.

உலகளவில் நம் நாடு எரிசக்தி, தொலைதொடர்பு முதல் டிஜிட்டல் வரை பல்வேறு துறைகளில் தனது செல்வாக்கை விரிவுப்படுத்தி வரகிறது. இப்படியான சூழலில் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் முகேஷ் அம்பானி தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இது இந்தியாவின் மதிப்பை உலக நாடுகள் மத்தியில் உயர்த்தி உள்ளது. அதோடு நம் நாட்டின் கலாசாரத்தை வெளிநாடுகளுக்கு உணர்த்தி உள்ளது. நாடு கடந்து நம் நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை இந்த திருமண விழா மூலம் முகேஷ் அம்பானி எடுத்து சென்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+