இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியது எப்படி? 2 காரணத்தை கூறி வாழ்த்திய பிரதமர் மோடி..
மும்பை: உலககோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தி இறுதி போட்டிக்குள் முன்னேறியுள்ளது. இந்நிலையில் தான் நியூசிலாந்து அணியை இந்தியா வீழ்த்தியது எப்படி? என்பது குறித்து 2 முக்கிய காரணங்களை கூறி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து கவனம் ஈர்த்துள்ளார்.
50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன. இன்று முதலாவது அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.

இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. 2019 அரையிறுதி போட்டியில் இந்தியாவை, நியூசிலாந்து வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பியது. இதற்கு பழி தீர்க்கும் வகையில் இன்றைய போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும் என இந்திய ரசிகர்கள் விரும்பினர்.
இத்தகைய எதிர்பார்ப்புக்கு இடையே இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் இந்த பிரமாண்ட ஸ்கோருக்கு தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா-சுப்மன் கில் முக்கிய காரணமாகும். ரோகித் ஷர்மா 29 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். சுப்மன் கில் 80 ரன்கள் எடுத்து ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
இவர்கள் கொடுத்த சிறப்பான தொடக்கத்தை பயன்படுத்தி ‛ரன் மெஷின்' விராட் கோலி 117 ரன்கள் குவித்தார். இது அவரது 50வது ஒருநாள் போட்டி சதமாகும். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் தனது பங்குக்கும் சதமடித்தார். 70 பந்துகளில் அவர் 105 ரன்கள் குவித்தார். ராகுல் 20 பந்துகளில் 39 ரன்கள் குவித்து அவுட்டாகி இருந்தனர். நியூசிலாந்து அணியை பொறுத்தமட்டில் சவுத்தீ 10 ஓவர்கள் வீசி 100 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முதல் அணியாக நுழைந்தது. நியூசிலாந்து அணியை பொறுத்தமட்டி்ல அதிகபட்சமாக டாரில் மிட்செல் சதமடித்து இருந்தார். அவர் 134 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கேப்டன் கனே வில்லியம்சன் 69 ரன்களும், கிளைன் பிலிப்ஸ் 41 ரன்களும் எடுத்து அவுட்டாகி உஇருந்தவர்கள். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இந்திய அணியை பொறுத்தமட்டில் 9.5 ஓவர்கள் வீசிய முகமது ஷமி 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
இந்திய அணியின் இந்த வெற்றியை நம் நாட்டில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான் இந்திய அணியின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. அருமையான பேட்டிங், சிறந்த பந்துவீச்சு நம் அணிக்கு வெற்றியை தந்துள்ளது. இறுதி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.
****
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications