பெண்குழந்தை பெற்றதால் ஆத்திரம்.. சிலிண்டரைத் தூக்கி மனைவியை அடித்த கணவர் கைது!
சிலிண்டரால் மனைவியைத் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

மும்பை: பெண் குழந்தை பிறந்தது தொடர்பான வாக்குவாதத்தில் சிலிண்டரால் தாக்கி மனைவியை சிலிண்டரைக் கொண்டு கடுமையாகத் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள பன்வேல் பகுதியைச் சேர்ந்தவர் அல்பேஷ் (30). கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அவ்னி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்தாண்டு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அல்பேஷ் ஆண் குழந்தையை பெரிதும் எதிர்பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பெண் குழந்தை பிறந்த நாள் முதல் அவர் அவ்னியுடன் சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், தீபாவளியை ஒட்டி கடந்த 5ம் தேதி அல்பேஷ், அவ்னி மற்றும் அவர்களது ஒரு வயது குழந்தை துணி வாங்க கடை வீதிக்குச் சென்றுள்ளனர். அப்போதும் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபத்தில் இருந்த அல்பேஷ், வீட்டிற்கு வந்ததும் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரை எடுத்து மனைவி மீது வீசியுள்ளார். பின்னர் கிரிக்கெட் பேட்டால் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவ்னி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், எட்டு நாள் சிகிச்சை அளித்தும் தொடர்ந்து அவ்னியின் நிலை மோசமாகவே இருப்பதாகவே மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அல்பேஷைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications