Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைமாறும் கட்சி? தகுதி நீக்கவும் முடியாதாமே! ஆதரவாளர்களுடன் தப்பும் அஜித் பவார்? சரத்பவாருக்கு செமஅடி

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கரம் கோர்த்து துணை முதல்வராகி உள்ளார். இந்நிலையில் தான் அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களை தேசியவாத கட்சியின் தலைவர் என்ற முறையில் சரத்பவாரால் தகுதி நீக்கம் செய்வதில் சிக்கல் உள்ளது. அதோடு சரத்பவாரிடம் இருந்து ஒட்டுமொத்த கட்சியும் அஜித்பவார் வசம் செல்லலாம் என்ற ஷாக் தகவலும் வெளியாகி உள்ளது. இது எப்படி?.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியில் சிவசேனா இருந்தது. ஆனால் 2019 தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டணி பிரிந்தது. சிவசனோ, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சியை பிடித்தன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தார்.

 If Ajit Pawar gets support of more than 36 MLAs, sharad pawar could not be action under anti-defection law?

இந்த ஆட்சி இரண்டரை ஆண்டில் கவிழ்ந்தது. கடந்த ஆண்டு சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே 35க்கும் அதிகமான எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தது தான் இதற்கு காரணம். இதையடுத்து பாஜக, ஏக்நாத் ஷிண்டே அணி கூட்டணி ஆட்சி அமைந்தது.

மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார். துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். இந்நிலையில் தான் இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் நேற்று கூறிய நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பயங்கர ட்விஸ்ட் ஏற்பட்டது.

அதாவது மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்) பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் 28 எம்எல்ஏக்களுடன் ராஜ்பவனுக்கு சென்று இன்று துணை முதல்வரானார். அவரது 8 ஆதரவு எம்எல்ஏக்கள் அமைச்சராகி உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவார் உள்ள நிலையில் அவருக்கே தெரியாமல் அண்ணன் மகன் அஜித் பவார் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகி உள்ளார்.

இந்தியாவில் மிகவும் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக சரத் பவார் உள்ளார். இவர் அனைத்து கட்சி தலைவர்களுடன் சுமூக உறவை வைத்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைக்க அவர் முயன்று வரும் நிலையில் அவரது கட்சியின் அஜித் பவார் 30 எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணிக்கு தாவியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தற்போது அங்கு 53 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் அஜித் பவாருக்கு 40 முதல் 43 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இது சரத் பாவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போதைய நிலையை பார்த்தால் கட்சியே சரத் பவாரின் கையில் இருந்து அஜித் பவார் வசம் செல்லும் நிலை ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக சென்றுள்ள அஜித் பவார் மற்றும் அவரது எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சரத் பவார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது விதிகளின் படி கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தன்மீதும், தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை பாயாமல் இருக்க வேண்டும் என்றால் அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களில் 36 பேரின் ஆதரவு வேண்டும்.

அதாவது கட்சி மாறும் எம்எல்ஏக்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் தகுதி நீக்கம் செய்ய அரசியல் சாசனத்தில் 10வது அட்டவணை இடமளிக்கிறது. இது எம்பி, எம்எல்ஏக்கள் என 2 தரப்புக்கும் பொருந்தும். ஆனால் ஒரு கட்சியில் உள்ள எம்எல்ஏக்களில் 3ல் ஒரு பகுதியினர் ராஜினாமா செய்தல் அல்லது 3ல் 2 பங்கு எம்எல்ஏக்கள் வேறோரு கட்சியுடன் இணைதல் உள்ளிட்டவற்றுக்கு இந்த சட்டம் விதிவிலக்கு அளிக்கிறது.

அந்த வகையில் பார்த்தால் அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கட்சிதாவல் தடை சட்டம் பாயாமல் இருக்க 36 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். இல்லாவிட்டால் அஜித் பவார் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். ஆனால் அஜித் பவார் தனக்கு 40 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் கட்சிதாவல் தடை சட்டத்தின் மீதும் சரத்பவாரால் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் உருவாகலாம். மேலும் தகுதி நீக்க நடவடிக்கையை பொறுத்தமட்டில் சட்டசபை சபாநாயகர் தான் முக்கிய நடவடிக்கை எடுப்பார். இதுவும் சரத்பாவருக்கு எதிரானதாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் அஜித் பவார் உள்ளிட்டவர்கள் தகுதி நீக்கத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது நடக்கும் பட்சத்தில் உண்மையான தேசியவாத காங்கிரஸ் நாங்கள் தான் என அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் முறையிடுவார்கள். இது சரத் பவாருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். அதோடு கட்சியும் அவரது கையை விட்டு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

ஏனென்றால் மகாராஷ்டிராவில் சிவசேனா, தமிழ்நாட்டில் அதிமுக ஆகியவை இரண்டாக பிரிந்ததையும், இருகட்சிகள் கடந்து வந்த பாதையையும் கவனித்தால் உண்மையான சிவசேனா, அதிமுக என அதிக எம்பி, எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ள தரப்பு தான் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அஜித் பவாரின் தற்போதைய நடவடிக்கை உண்மையிலேயே சரத் பவாருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+