மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பையில் நாளை முதல் 3 நாளுக்கு வெளுத்தெடுக்க போகும் மழை.. தாழ்வான இடத்தில் உள்ளோர் உஷார்

Google Oneindia Tamil News

மும்பை: நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு மும்பையில் மிகவும் பலத்த மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recommended Video

    Tamilnadu Weatherman | தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மழை நிலவரம் என்ன? | Oneindia Tamil

    மும்பையில் கடந்த ஜூன் 10-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களாக நகரில் லேசான மழை பெய்து வருகிறது.

    நேற்று காலை 24 மணி நேரத்தில் மும்பையில் 3 மி.மீ. மழையும் சாந்தாகுருஸில் 1 மி.மீ.ருக்கும் குறைவான மழையே பதிவாகியிருந்தது.

    ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை.. இந்தியாவில் அதிகபட்ச மழை எங்கு?.. மழையே பெய்யாத பகுதி எது?.. வெதர்மேன்ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை.. இந்தியாவில் அதிகபட்ச மழை எங்கு?.. மழையே பெய்யாத பகுதி எது?.. வெதர்மேன்

    தண்ணீர் தேங்குதல்

    தண்ணீர் தேங்குதல்

    இந்த நிலையில் நாளை முதல் 5-ஆம் தேதி வரை மும்பையில் மிகவும் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராய்காட்

    ராய்காட்

    அது போல் ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர், புணே, சாங்கிலி, ஓஸ்மனாபாத் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த 3 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜால்னா, அவுரங்காபாத், நாந்தெத் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மழை பெய்யும்

    மழை பெய்யும்

    இந்திய வானிலை மையத்தின் வகைப்படுத்துதலின்படி அதிக முதல் மிக அதிக மழை என்பது 24 மணி நேரத்தில் 64.5 மி.மீ. முதல் 204 மி.மீ. மழை வரையாகும். எனவே ராய்காட் உள்ளிட்ட பகுதிகளில் இத்தனை மி.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புறநகர் பகுதிகள்

    புறநகர் பகுதிகள்

    மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த ஜூலை 27 முதல் 28 வரை தொடர் மழை பெய்ததில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த தேதிகளில் 24 மணி நேரத்தில் கோலாபா வானிலை மையத்தில் 60 மி.மீ. மழையும். சாந்தாகுரூஸில் 100 மி.மீ மழையும் பெய்திருந்தது.

    English summary
    IMD warns Mumbai and its parts will get heavy very heavy rainfall for next 3 days upto August 5.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X