மும்பையில் அமையும் பிரம்மாண்டம்.. ஏர்போர்ட் எல்லாம் தோத்துடும்! நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையம்
மும்பை: இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் கட்டுமானம் படுவேகமாக நடந்து வரும் நிலையில், மும்பை புல்லட் ரயில் நிலையத்தின் வீடியோவை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.
உலகிலேயே மிகவும் விரிவான ரயில் நெட்வோர்க்களில் ஒன்றாக இந்த ரயில்வே இருக்கிறது. இந்தியாவில் எந்தவொரு முக்கிய பகுதிக்கும் குறைந்த செலவில் செல்ல வேண்டும் என்றால் ரயில் மட்டுமே ஒரே ஆப்ஷன். குறிப்பாக முதியவர்கள், பெண்கள் நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில்களையே தேர்வு செய்கிறார்கள்.

அதேநேரம் இந்திய ரயில்களின் வேகம் போதியளவில் இல்லை என்ற விமர்சனம் இருந்து கொண்டே இருந்தது. இதற்காக இந்திய ரயில்வே வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தியது. இதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது.
புல்லட் ரயில்: அடுத்தகட்டமாக புல்லட் ரயில்களும் இந்தியாவிற்கு வரவுள்ளது. அதற்கான கட்டுமானமும் படுவேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையே குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மல்டிமோடல் டிரான்ஸ்போர்ட் ஹப்பில் அமையவுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நிலையத்தின் சில படங்களை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பகிர்ந்துள்ளார்.
மும்பை, அகமதாபாத் இடையே இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் ரயில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் இரு முக்கிய நகரங்களை இணைக்கும் இந்தத் திட்டம் ரயில்வே துறையின் மிகப் பெரிய திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்த புல்லட் ரயில் பாதை 508 கிமீ நீளம் கொண்டது. மேலும், இதில் 448 கிமீ உயர்த்தப்பட்ட வழித்தடத்திலும், 26 கிமீ சுரங்கங்களில் அமைய உள்ளது. மேலும்,10 கிமீ பாலங்களிலும் அமைய உள்ளது.
வாவ் செம: இந்த கட்டுமானம் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள புல்லட் ரயில் நிலையத்தின் படத்தை ரயில்வே அமைச்சர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது. கிட்டதட்ட விமான நிலையத்தைப் போல அகமதாபாத்தில் பிரம்மாண்டமாக இந்த புல்லட் ரயில் நிலையம் அமைகிறது. அதில் ஒரு பக்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் சுமார் 1,33,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையும் இந்த புல்லட் ரயில்வே ஸ்டேஷனில் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகளும் கூட அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: மும்பை-அகமதாபாத் புல்லட் ரயிலில் முக்கிய பகுதியான பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளில் சுமார் 15 சதவீதத்தை முடித்துவிட்டதாகக் கடந்த மாதம் தான் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் அமைப்பு அறிவித்திருந்தது. இத்திட்டம் முதலில் 2023க்குள் நிறைவடையும் எனக் கூறப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
இப்போது அனைத்து சிக்கல்களும் முடிந்து கட்டுமானம் நடந்து வரும் நிலையில், 2027இல் இது நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புல்லட் ரயில் ரூட்டில் இந்த மும்பை ரயில் நிலையம் மட்டுமே நிலத்திற்கு அடியில் அமைகிறது. இது 16-கோச் புல்லட் ரயில்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
ஆறு நடைமேடைகளைக் கொண்ட இந்த ரயில்வே ஸ்டேஷன் 32 மீட்டர் நீளத்தில் அமைகிறது. அதில் சுமார் 24 மீட்டர் ஆழத்தில் பிளாட்பார்ம்கள் அமைய உள்ளது. இதில் பிளாட்பாரம், கான்கோர்ஸ் மற்றும் சர்வீஸ் தளம் ஆகிய மூன்று தளங்கள் இருக்கிறது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications