எந்த அறிவிப்பும் வேலைக்கு ஆகவில்லை.. தொடர்ந்து சரியும் சென்செக்ஸ், நிஃப்டி.. நிறுவனங்கள் அதிர்ச்சி
Recommended Video
மும்பை: மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீண்டும் சரிவை சந்திக்க தொடங்கி இருப்பது பங்குவர்த்தகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக நிறைய சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவித்து வருகிறது.
ஆனால் இந்த பொருளாதார சரிவு இப்போதைக்கு மீள்வதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இப்போதே ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள். வங்கிகள் இணைப்பும் பெரிதாக பலன் அளிக்கவில்லை.

மும்பை
நேற்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 36724 புள்ளிகளுடன் முடிந்தது. இன்று காலை சென்செக்ஸ் திறக்கும் போது, 111 புள்ளிகள் உயர்ந்து 36835 புள்ளிகளுடன் தொடங்கியது. அதன்பின் மேலும் உயர்ந்து 36893 புள்ளிகளை அடைந்தது. ஆனால் அதன்பின் தொடர்ந்து புள்ளிகள் சரிந்த வண்ணம் இருக்கிறது.

தொடர் சரிவு
தொடர்ந்து காலை 11 மணியில் இருந்து புள்ளிகள் சரிந்த வண்ணம் உள்ளது. தற்போது சென்செக்ஸ் 36611 புள்ளிகளை அடைந்துள்ளது. 224 புள்ளிகள் காலையில் 10 மணியில் இருந்து சார்ந்துள்ளது. இது மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நிஃப்டியும் காலையில் இருந்து சரிந்த வண்ணம் உள்ளது.

மோசம்
நேற்று மூடும் போது நிஃப்டி 10860 புள்ளிகளுடன் முடிந்தது. இன்று காலை 40 புள்ளிகள் உயர்ந்து 10900 புள்ளிகளுடன் நிஃப்டி தொடங்கியது. அதன்பின் 10917 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஆனால் தற்போது தொடர்ந்து சரிந்து நிஃப்டி 10828 புள்ளிகளை அடைந்துள்ளது. இது நேற்றைய புள்ளிகளை விட குறைவாகும்.

பாதிப்பு
முக்கியமாக எச்டிஎப்சி வங்கி, டிசிஎஸ், கோடாக மஹிந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி ஆப் இந்தியா, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த தொடர் சரிவு காரணமாக வங்கி சார்ந்த பங்கு வர்த்தகங்கள்தான் அதிகமான இழப்பை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications