புயலுக்கு பஞ்சமில்லை, படகில் துளையிடுவோம், இந்தியாவை முடக்குவோம்.. பந்த்துக்கு எதிராக கங்கனா கவிதை
மும்பை: நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து போராடி வந்த நிலையில் விவசாயிகளுக்கு எதிராக நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று பாரத் பந்த் போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். இதனால் இன்று நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. ரயில்கள் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.

இந்தியாவை முடக்குவோம்
இந்த போராட்டம் குறித்து ட்விட்டரில் நடிகை கங்கனா ரனாவத் விவசாயிகளின் பாரத் பந்துக்கு எதிராக கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் வாருங்கள் இந்தியாவை முடக்குவோம். இந்தப் படகை தாக்கவல்ல புயல்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும் அதில் சில துளைகளை உருவாக்க ஒரு கோடாரியைக் கொண்டு வாருங்கள்.

வீதிகளில் இறங்குங்கள்
இங்கே ஒவ்வொரு நாளும் நம்பிக்கை இறக்கிறது. தேசபக்தர்களிடம் இந்த தேசத்தின் ஒரு பகுதியை கேட்கச் சொல்லுங்கள். வீதிகளில் இறங்குங்கள், நீங்களும் எதிர்ப்பு தெரிவியுங்கள், இந்தக் கதையை இத்துடன் மொத்தமாக முடித்துக் கொள்வோம் என ஒரு கவிதையை பகிர்ந்துள்ளார். இதனால் கங்கனாவை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

கங்கனா
விவசாயிகளுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு ஆதரவாகவும் கங்கனா பேசுவது முதல் முறையல்ல. ஏற்கெனவே வேளாண் சட்டங்கள் நிறைவேறிய போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த போது குடியுரிமைச் சட்டத்தை யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்கள்தான் விவசாய சட்டங்களையும் எதிர்க்கிறார்கள். இந்தச் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் தீவிரவாதிகள் என சர்ச்சை கருத்தை கங்கனா வெளியிட்டார்.

போராளி
அது போல் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது போராளி பில்கிஸ் பனோவுக்கு பதில் வேறொரு போராளியின் புகைப்படத்தை பகிர்ந்து, இவர் குடியுரிமைச் சட்டப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். 100 ரூபாய் கொடுத்தால் எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்வார் என கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார் கங்கனா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications