லக்கிம்பூர் வன்முறை: மகாராஷ்டிராவில் இன்று பந்த்.. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்தும் முடக்கம்

மகாராஷ்டிராவில் இன்று பந்த் நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. இந்த போராட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்தும் முடங்கி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பாஜகவினர் காரை மோதியதில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர்... இதையடுத்து நடந்த வன்முறையில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 6 பேர் பலியானார்கள்... பத்திரிகையாளர் ஒருவருடன் சேர்த்து 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த வன்முறை சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.. இந்நிலையில், விவசாயிகள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து மராட்டியத்தில் இன்று ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

அதன்படி இன்று காலை முழு அடைப்பு தொடங்கி உள்ளது. இந்த பந்த்தையொட்டி மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது... குறிப்பாக அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். எந்த சூழலையும் எதிர் கொள்ள வசதியாக அதிகபட்ச போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

 அத்தியாவசிய கடைகள்

அத்தியாவசிய கடைகள்

ஆனால், ஆஸ்பத்திரி, ஆம்புலன்ஸ் சேவை, மெடிக்கல் ஷாப்கள், பால் சப்ளை போன்ற அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளது.. புனேயில் ஏபிஎம்சி. மார்க்கெட் மூடப்படும் என வியாபாரிகள் ஏற்கனவே அறிவித்தும் விட்டனர்.. இந்த பந்த் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்ய மும்பை காவல்துறை சில திட்டங்களை வகுத்துள்ளது.

 நவாப் மாலிக்

நவாப் மாலிக்

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி அல்லது என்சிபி அடங்கிய மகாராஷ்டிரா விகாஸ் அகாடி அரசு இந்த பந்திற்கு ஆதரவு அளித்துவிட்டது.. நேற்று முன்தினம் 3 கட்சி செய்தி தொடர்பாளர்களும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியிருந்தனர்... அப்போது மகாராஷ்டிராவின் 12 கோடி மக்களை விவசாயிகளுக்கு ஆதரவளிக்குமாறு தான் கேட்டுக் கொள்வதாக மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கும் கேட்டுக் கொண்டிருந்தார்.

 சஞ்சய் ராவத்

சஞ்சய் ராவத்

அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது... மேலும் வேளாண் விளைபொருள் சந்தை குழுக்களும் மூடப்படும்.. அதேபோல, சிவசேனா முழு வீச்சில் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கு பெறும் என சஞ்சய் ராவத் எம்பி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். லக்கிம்பூர் கெரியில் நடந்தது அரசியலமைப்பின் கொலை, சட்ட மீறல் மற்றும் நாட்டின் விவசாயிகளை கொல்ல சதியே என்று பகிரங்கமாக கூறினார்.

 மும்பை போலீஸ்

மும்பை போலீஸ்

இந்த முழு அடைப்பு பந்த் காரணமாக மக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்ய மும்பை காவல்துறை திட்டம் வகுத்துள்ளது... 3 கம்பெனி மாநில ரிசர்வ் போலீசார், 500 ஊர்காவல் படை வீரர்கள், உள்ளூர் ஆயுத படையை சேர்ந்த 400 போலீசார் கூடுதலாக நவராத்திரி பண்டிக்கைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் முழு அடைப்பு போராட்டத்தை கருத்தில் கொண்டு எந்த சூழலையும் எதிர் கொள்ள வசதியாக அதிகபட்ச போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இன்று சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

 திடீர் ஆதரவு

திடீர் ஆதரவு

கடந்த திங்கட்கிழமை பந்த் அழைப்பிற்கு, மகாராஷ்டிராவில் உள்ள வர்த்தகர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது... சிவசேனா மற்றும் பிற கட்சி தலைவர்களின் வேண்டுகோளுக்கு பிறகு, விவசாயிகளை கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகா விகாஸ் அகதி அரசாங்கத்தின் பந்த் அழைப்புக்கு ஆதரவாக மாலை 4 மணி வரை கடைகளை மூட முடிவு செய்துள்ளோம் என்று சில்லறை கூட்டமைப்பின் தலைவர் விரேன் ஷா தெரிவித்தார்..

லாக்டவுன்

லாக்டவுன்

லாக்டவுன் போடப்பட்டு இப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவதாக வணிகர் சங்கம் முன்பு தெரிவித்திருந்த நிலையில், இன்றைய பந்த் அவர்களின் வருவாயை மேலும் பாதிக்கும் சூழல் உள்ளது.. "லாக்டவுன் காரணமாக கடந்த 18 மாதங்களாக நாங்கள் பெரும் இழப்பைச் சந்தித்தோம்.. எங்கள் வியாபாரம் இப்போதுதான், மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.. இந்த நேரத்தில் பந்த் என்பது நிச்சயம் எங்கள் வியாபாரத்தை பாதிக்கும்.. அதனால் சில்லறை வணிகங்கள் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் அல்லது மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம் என்று திரு ஷா கூறினார்.

 நிதேஷ் ரானே

நிதேஷ் ரானே

இருப்பினும், அரசியல் குறுக்குவழியில் வியாபாரிகள் சிக்கியிருப்பதாக தெரிகிறது.. காரணம், இந்த பந்த் ஆதரவுக்காக கடைகளை கட்டாயமாக மூடுவதை அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக தெரிவித்துள்ளது.. இந்த வேலைநிறுத்த போராட்டம் குறித்து மகாராஷ்டிர பாஜக தலைவர் நிதேஷ் ரானே தன்னுடைய ட்விட்டரில், "நாளை ஆளும் கூட்டணி கட்சிகள் எந்த கடையையும் மூடச் சொல்லி வற்புறுத்தக் கூடாது.. அவர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால், பாஜக தொண்டர்களை எதிர்கொள்ள நேரிடும். இதனால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம். அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது" எனப் பதிவிட்டுள்ளார்

 காவல்துறை

காவல்துறை

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.. இந்த வழக்கில் முன்னதாக, ஆசிஷ் மிஸ்ரா மீது உபி போலீஸ் சரியான, மற்றும் துரிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+