மும்பை மகாதேவ் சூதாட்ட ஆப் ஓனர்களுக்கு தாவுத் இப்ராஹிமுடன் தொடர்பா? அமலாக்கத் துறை அதிர்ச்சி தகவல்
மும்பை: மகாதேவ் சூதாட்ட செயலியை உருவாக்கிய சவுரவ் சந்திரகர் மற்றும் ரவி உப்பால் ஆகியோர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரருடன் இணைந்து பாகிஸ்தானிலும் சூதாட்ட செயலியை உருவாக்கியதாக அமலாக்கத் துறை விசாரணை தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான செயலி மகாதேவ் ஆகும். இது ஒரு சூதாட்ட செயலி. இதன் மூலம் பல கோடி ரூபய் மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் இந்த செயலியை விளம்பரப்படுத்திய பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த செயலியை சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சரவுரப் சந்திரகர், அவருடைய நண்பர் ரவி உப்பால் ஆகியோர் உருவாக்கினர். ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமையிடமாகக் கொண்டு இந்த செயலி செயல்பட்டு வருகிறது. சவுரப் சந்திரகர் இந்தியாவில் இருந்த போது ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டார்.
இதையடுத்து அவர் நண்பர் உப்பாலுடன் தப்பி துபாய் சென்று அங்கிருந்த படியே சூதாட்ட செயலியை உருவாக்கி அதை இந்தியாவில் அறிமுகம் செய்தது தெரியவந்தது. இந்த மோசடி புகார் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனையில் ரூ 417 கோடி முடக்கப்பட்டுள்ளது.
ரூ 5 ஆயிரம் கோடிக்கு பண மோசடி நடந்ததாக தெரிகிறது. கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் ரூ 200 கோடி செலவு செய்து தனது திருமணத்தை சவுரப் சந்திரகர் நடத்தியுள்ளார். இந்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனி விமானத்தில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த திருமணத்திற்கு துபாயில் அளிக்கப்பட்ட விருந்தில் நடிகர்களுக்கு தலா ரூ 40 கோடி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அது போல் பெரிய அரசியல்வாதிகள், காவல் துறை அதிகாரிகளுக்கும் பணம் போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகாதேவ் செயலியின் கீழ் சட்டவிரோதமாக 60 க்கும் மேற்பட்ட விளையாட்டு செயலிகளை நடத்தி வருவது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது. பாகிஸ்தானில் கூட காஸ்கர் என்பவர் மூலம் இவர்கள் சூதாட்ட செயலியை தொடங்கியுள்ளனர்.
காஸ்கரின் உதவியுடன் சந்திரகரை சுற்றி எப்போதும் 20 முதல் 30 பவுன்சர்கள் இருப்பார்கள். சந்திரகரிடம் 4 முதல் 5 சொகுசு கார்கள் உள்ளன. அவற்றை கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பலத்த பாதுகாப்புடன் வலம் வருகிறாராம். மேலும் சந்திரகர் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு துப்பாக்கி குண்டு துளைக்காத வகையில் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்திய புலனாய்வு அமைப்புகள் தன்னை விசாரிப்பது தெரிந்ததும் சந்திரகர் செல்லும் முக்கிய விசேஷங்கள், கூட்டங்கள் அவர் வருவதற்கு முன்பே தீவிர கண்காணிப்பு செய்யப்படும். KHELOYAR என்ற சூதாட்ட செயலிதான் பாகிஸ்தானில் அதிக லாபம் ஈட்டி வருகிறது. இந்த செயலியை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த காஸ்கர் என்பவர் சந்திரகர், உப்பாலுடன் இணைந்து நடத்தி வருகிறார்.
காஸ்கருக்கு 1997ஆம் ஆண்டு பாகிஸ்தான் பாஸ்போர்ட் கொடுத்துள்ளது. அவருக்கு துபாயில் குடியிருப்பு விசாவும் உள்ளது. காஸ்கர் நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரர் என சொல்லப்படுகிறது. 1986ஆம் ஆண்டு காஸ்கர் தனது குடும்ப உறுப்பினர்கள், தாவூத் இப்ராஹிமுடன் துபாய் சென்றார்.
அது நாள் முதல் காஸ்கர் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலேயே சுற்றி வருகிறார். தாவுத் இப்ராஹிமுக்கு 6 சகோதரர்கள். அவர்களில் நூரா, ஹுமாயுன், சபீர் ஆகியோர் இறந்துவிட்டனர். மற்ற 3 சகோதரர்களான அனீஸ், இக்பால், காஸ்கர் ஆகியோர் உயிருடன் உள்ளனர். இக்பால் இந்தியாவிலும் காஸ்கர் மற்றும் அனீஸ் கராச்சியில் தாவுத் இப்ராஹிமுடன் தங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
சந்திரகர், உப்பாலுக்கு சவுதியில் காஸ்கர் ஒரு வில்லாவை பரிசாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மகாதேவ் செயலி இந்தியாவில் வெற்றிக்கரமாக செயல்பட்டு வருவதால் ஐக்கிய அரபு நாடுகளில் காஸ்கருடன் தொடர்பில் உள்ள செல்வாக்குமிக்க நபர்களுடன் சந்திரகருக்கு தொடர்பு ஏற்பட்டது. இவர்கள்தான சந்திரகரை காஸ்கருக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் தெரிகிறது. மகாதேவ் செயலி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ரன்பீர் கபூர், ஹுமா குரேஷி, ஹினா கான், கபில் சர்மா, ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது, அதற்கு ஆஜராக அவர்கள் கால அவகாசம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாகிஸ்தான் சட்டையை பிடிக்கும் அமீரகம்! "அந்த ₹25,000 கோடியை உடனே திருப்பி தாங்க.." எகிறும் நெருக்கடி -
"பில் கட்டக் கூட காசு இல்லையா?" கம்பி நீட்டிய பாகிஸ்தான்.. இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications