மகாராஷ்டிராவில் பயங்கரம்.. ராணுவ குடோனில் குண்டு வெடிப்பு.. 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தா என்ற நகரில் உள்ள ராணுவ குடோனில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் சிக்கி, 5 பேர் பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் ராணுவ குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் இன்று காலை 8 மணியளவில் பழைய குண்டுகளை அகற்றுவது மற்றும் புதைப்பது தொடர்பான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததில் அந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 பேர் பலியாகினர், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Maharashtra: 5 killed, 6 injured in explosion in Pulgaon Army depot in Wardha

உயிரிழந்ததில் 3 பேர் வெடிகுண்டு தயாரிப்பு ஆலையின் பணியாளர்கள் என்றும், இருவர் தொழிலாளர்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

வார்தா நகரின் புல்கான் பகுதியில் உள்ள இந்த ராணுவ வெடிகுண்டு ஆலை ஆசியாவின் மிகப்பெரியதாகும். 2016ஆம் ஆண்டு மே மாதம் இங்கு எதிர்பாராதவிதமாக குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது 16 பேர் கொல்லப்பட்டனர் அதில் இரண்டு பேர் ராணுவ அதிகாரிகள்.

ராணுவத்திற்கான, வெடி குண்டுகள், கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள், ஏவுகணைகள், முதலில் இங்கு கொண்டுவரப்பட்டு பிறகுதான், பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+