மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: சயான் கோலிவாடா தொகுதியில் கேப்டன் தமிழ்ச்செல்வன் 3-வது முறையாக போட்டி!
மும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சயான் கோலிவாடா தொகுதி பாஜக வேட்பாளராக மீண்டும் களமிறங்குகிறார் கேப்டன் தமிழ்ச்செல்வன். சயான் கோலிவாடா தொகுதியில் 2014, 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான தமிழ்ச்செல்வன், தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். மகாராஷ்டிராவில் வார்டு கவுன்சிலராக இருந்து எம்.எல்.ஏ.வானவர் தமிழ்ச்செல்வன்.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 150 முதல் 156 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. பாஜக, ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 99 வேட்பாளர்களை பாஜக நேற்று முதல் கட்டமாக அறிவித்தது. அனைத்து அரசியல் கட்சிகளைவிட பாஜக முந்திக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த பட்டியலில் 13 பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாஜக நேற்று வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சயான் கோலிவாடா தொகுதியில் பாஜக வேட்பாளராக 3-வது முறையாக களம் காண்கிறார் தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ. தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலா விடுதியைச் சேர்ந்தவர் கேப்டன் தமிழ்ச்செல்வன். சயான் கோலிவாடா கவுன்சிலராக பணியாற்றிய நிலையில் 2014-ம் ஆண்டு பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வென்றார். 2019-ம் ஆண்டு சயான் கோலிவாடா தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார் கேப்டன் தமிழ்ச் செல்வன்.
3-வது முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கேப்டன் தமிழ்ச் செல்வன் கூறுகையில், என் மீது நம்பிக்கை வைத்து பிரதமர் மோடி உள்ளிட்டோர் இந்த வாய்ப்பை வழங்கி உள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ், அமித்ஷா உள்ளிட்டா அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது உறுதி. தமிழர்களின் ஆதரவுடன் 3-வது முறையாக வெல்வேன் என்கிற நம்பிக்கை உள்ளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications