பாஜக கூட தப்பவில்லை.. 6 கட்சிகள், 6 தலைவர்களுக்கு மகாராஷ்டிராவில் அக்னி பரீட்சை தான்.. என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த முறை மகாராஷ்டிராவில் பல கட்சிகள், பல தலைவர்களுக்கு வாழ்வா சாவா தேர்தலாக மாறியிருக்கிறது. அதில் யாருக்கெல்லாம் இந்த தேர்தல் புதிய தொடக்கமாக இருக்கும்.. யாரின் அரசியல் எதிர்காலமே முடிவுக்கு வரும் என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்திடும்.

மகாராஷ்டிராவில் இந்த முறை பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி கூட்டணிக்கும் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் காங்கிரஸ்- தாக்ரே சிவசேனா- சரத் பவார் என்சிபி கூட்டணிக்கும் தான் போட்டி நிலவுகிறது.

election results 2024 maharashtra assembly election 2024 by poll election 2024 2024

போட்டி: இந்த முறை மகாராஷ்டிரா தேர்தல் என்பது பல கட்சிகள், பல தலைவர்களுக்கு ரொம்பவே முக்கியமான தேர்தலாக மாறியிருக்கிறது. அங்குப் பிரதான மாநிலக் கட்சிகளான என்சிபி மற்றும் சிவசேனா கட்சிகள் இரு பிரிவுகளாக உள்ளன. எனவே, யார் உண்மையான என்சிபி மற்றும் சிவசேனா என்பதில் இரு தரப்பிற்கும் இடையே போட்டி இருக்கும்.

என்சிபி: என்சிபி கட்சியைப் பொறுத்தவரை சரத் பவார் தரப்பு இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. இந்திய அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராக அறியப்படும் சரத் பவாருக்கு அடுத்த மாதம் 84 வந்தால் வயதாகிறது. யார் கிங் என்பதை அவர் கடந்த லோக்சபா தேர்தலிலேயே அஜித் பவாருக்கு உணர்த்தியிருந்தார். புதிய சின்னத்தில் போட்டியிட்டாலும் 10ல் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வென்று காட்டியிருந்தார்.

மறுபுறம் அஜித் பவார் ரியல் என்சிபி கட்சியாகப் போட்டியிட்டது. 4 தொகுதிகளில் அவர்கள் போட்டியிட்ட நிலையில், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்தது.

சிவசேனா: சிவசேனாவிலும் கிட்டதட்ட இதே நிலை தான். அங்கும் கட்சி தாக்ரே தரப்பு, ஷிண்டே தரப்பு என்று பிரிந்து ஒவ்வொரு கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அதேநேரம் என்சிபி கட்சியைப் போல லோக்சபா தேர்தலை வைத்து தொண்டர்கள் எந்த பக்கம் இருக்கிறார்கள் என்பதைச் சொல்ல முடியாது. ஏனென்றால் அந்த தேர்தலில் இரு தரப்பும் கிட்டதட்ட போட்டியிட்ட 50% தொகுதிகளில் வென்று இருந்தன. எனவே, இந்த தேர்தலில் இரு தரப்பும் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

காங்கிரஸ்: அடுத்து காங்கிரஸ்.. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஹரியானா மாநிலத்தில் சந்தித்த எதிர்பாராத தோல்வி காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளைக் கடுமையாக பாதித்தது. இதனால் தொடக்கத்தில் மகாராஷ்டிர பிரச்சாரத்திலேயே சுணக்கம் இருந்தது. அதேநேரம் இறுதியில் பிரச்சாரம் சூடுபிடித்தது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் வெல்லும்பட்சத்தில் அது தொண்டர்களுக்கு பூஸ்டாக அமையும். மேலும், அடுத்தாண்டு டெல்லி தேர்தலுக்கு இது உற்சாகத்தைத் தரும்.

பாஜக: வழக்கமாகக் கடந்த 10 ஆண்டுகளாக பெரும்பாலான தேர்தல்களை பாஜக நல்ல நிலையில் இருந்து கொண்டே எதிர்கொண்டு இருக்கிறது. ஆனால், இந்த மகாராஷ்டிராவில் அதே நிலைமை எனச் சொல்ல முடியாது. என்னதான் ஆளும் தரப்பாக இருந்தாலும், முதல்வர் பதவி பாஜக வசம் இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தர வேண்டிய கட்டாயம் இருந்தது.

குறிப்பாகக் கூட்டணிக்குள்ளேயே அதிருப்தியைக் கண் கூடாகப் பார்க்க முடிந்தது. இந்துக்களே ஒன்றிணைவோம் என்ற முழக்கத்துடன் தேர்தலை பாஜக சந்தித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அஜித் பவார் தரப்பு வெளிப்படையாகவே அதிருப்தி தெரித்து இருந்தார். மேலும், பிரதமர் மோடியின் பிரச்சாரத்தையே கூட அஜித் பவார் புறக்கணித்து இருந்தார். இதுபோல நாம் சமீப காலங்களில் மோடியின் பிரச்சாரத்தைக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் புறக்கணிப்பது நாம் பார்த்தே இல்லை. அந்தளவுக்கு அங்கு பாஜக கூட்டணியில் குழப்பம் இருக்கிறது.

பொதுவாகப் பார்த்தால் மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் என்றாலும் உள்ளே இதுபோல பல லேயர்களில் போட்டி நிலவுகிறது. இதில் யாருக்கெல்லாம் வெற்றி கிடைக்கப் போகிறது. யாரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரப் போகிறது என்பது கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+