அயோத்தி தீர்ப்பு வர போகிறது.. சீக்கிரம் ஆட்சி அமையுங்கள்.. மகாராஷ்டிராவில் சரத் பவார் எச்சரிக்கை!
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வருவதற்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மும்பை: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வருவதற்குள் மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. இதனால் மஹாராஷ்டிராவில் இன்னும் ஆட்சி அமைக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது.
அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.

செய்திகள் தவறு
மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா இடையில் நிலவி வரும் பிரச்சனை குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அளித்த பேட்டியில், நாங்கள் சிவசேனாவுடன் பேசுவதாக வெளியாகி வரும் செய்திகள் தவறு. நாங்கள் சிவசேனா உடன் கூட்டணி வைக்க மாட்டோம். அது எப்போதும் நடக்காது. அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தர மாட்டோம்.

மக்கள் வாக்கு
சிவசேனா - பாஜக கூட்டணிக்குதான் மக்கள் வாக்களித்தார்கள். அதனால் அவர்கள் உடனடியாக ஆட்சி அமைக்க வேண்டும். சிவசேனா கோரிக்கை நியாயமானது. தேவேந்திர பட்னாவிஸ் அகங்காரத்துடன் இல்லாமல், முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும்.

அயோத்தி
மகாராஷ்டிராவில் சீக்கிரமாக அரசு அமைவதுதான் சரியாக இருக்கும். அயோத்தி வழக்கில் தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. அதற்குள் மகாராஷ்டிராவில் அரசு அமைய வேண்டும். இன்னும் இரண்டு வாரம்தான் உள்ளது என்பது பாஜக நினைவில் கொள்ள வேண்டும்.

பிரச்சனை
அயோத்தி பிரச்சனை பெரிதான சமயத்தில் எல்லாம் மும்பையிலும் பிரச்சனை வந்துள்ளது. இந்த முறையும் கூட அப்படி ஏதாவது நடக்கலாம். அமைதியான மகாராஷ்டிராவிற்கு உடனடியாக இங்கு ஏதாவது ஒரு கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டும், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications