மோடியின் கனவையே..காலியாக்கிய ஒரு மாநிலம்? மகாராஷ்டிராவில் பழிக்கு பழி வாங்கிய தாக்கரே! கேம் சேஞ்சர்
மும்பை: 2024 லோக்சபா தேர்தல் முடிவுகளை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி வெறும் 17 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
2024 லோக்சபா தேர்தல் முடிவுகளை மகாராஷ்டிராதான் பெரிய அளவில் தீர்மானிக்க போகிறது. இங்கே பாஜக கடந்த முறைபோல இடங்களை வெல்லவில்லை என்றால் தேசிய அளவிலும் அந்த கட்சிக்கு வெகுவாக இடங்கள் குறையும் வாய்ப்புகள் உள்ளன. அங்க பாஜக தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்த நிலையில் , மகாராஷ்டிராவில் மட்டும் 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. மகாராஷ்டிராவில் 19, 26 ஏப்ரல், 7, 13 மற்றும் 20 மே ஆகிய தேதிகளில் முதல் ஐந்து கட்டங்களில் தேர்தல் நடந்தது. மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவில் 61.33 சதவீத வாக்குகள் பதிவாகின.

அங்கே 3 விதமான கூட்டணிகள் நிலவுகின்றன. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உடைந்த காரணத்தால் தேர்தல் கூட்டணிகள் மூன்றாக பிரிந்தன.
பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவர் தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஜா ஆகியவை ஒன்றாக கூட்டணி வைத்தன. இதற்கு மஹாயுத்தி என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டணி வைத்துள்ளன. இதற்கு மகா ஆகாடி என்று வைக்கப்பட்டு உள்ளன. இது போக சிபிஐ, சிபிஎம், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்துள்ளன.
மகாராஷ்டிரா தேர்தல் சுவாரசியம்: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா இரண்டையும் பாஜக உடைத்தது. இதனால் இரண்டு அணிகள் உருவாகின. சின்னங்கள் மாறின. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் எந்த அணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும்.. எந்த அணியை உண்மையான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக கூட்டணியில் பாஜக 28 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 14 இடங்களிலும், அஜித் பவார் தலைமையிலான என்சிபி 5 இடங்களிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் கூட்டணியில் 21 இடங்களை உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு (UBT), காங்கிரஸ் கட்சிக்கு 17 மற்றும் தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் (SP) கட்சிக்கு 10 இடங்கள் வழங்கப்பட்டது.
ஸ்டார் வேட்பாளர்கள்: பியூஷ் கோயல் (பாஜக, மும்பை வடக்கு), அரவிந்த் சாவந்த் (சிவசேனா UBT, மும்பை தெற்கு), வர்ஷா கெய்க்வாட் (காங்கிரஸ், மும்பை வடக்கு மத்திய), கபில் பாட்டீல் (பாஜக, பிவாண்டி), ராஜன் விச்சாரே (சிவசேனா UBT, தானே), ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா, கல்யாண்), ராவ்சாகேப் தன்வே (பாஜக, ஜல்னா), பங்கஜா முண்டே (பாஜக, பீட்), சுஜய் விகே-பாட்டீல் (பாஜக, அகமதுநகர்), நிதின் கட்கரி (பாஜக, நாக்பூர்), சுப்ரியா சுலே (என்சிபி) எஸ்பி, பாராமதி), நவ்நீத் கவுர் ராணா (பாஜக, அமராவதி) மற்றும் சுதிர் முங்கண்டிவார் (பாஜக, சந்திராபூர்). ஆகியோர் போட்டியிட்டனர்.
மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மாநிலத்தில் 5 கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவில் 61.33 சதவீத வாக்குகள் பதிவாகின.
2019 லோக்சபா ரிசல்ட்: கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக இங்கே 23 இடங்களிலும் என்டிஏ கூட்டணி 41 இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் வென்றது, இதில் காங்கிரஸ் 1 இடத்திலும், தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களிலும் வென்றது. அப்போது சிவசேனா உடையாமல் பாஜக உடன் இருந்தது. இப்போது சிவசேனா உடைந்துவிட்டது. அதேபோல் உடையாமல் காங்கிரஸ் உடன் இருந்த தேசியவாத காங்கிரஸ் இரண்டாக பிரிந்துள்ளது.
இங்கே தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டால்.. பாஜகவிற்கான இடங்கள் குறைந்தால் மோடியின் ஆட்சி அமைக்கும் கனவு கூட வீழ்ச்சி அடையும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications