சின்ன பையன் நீங்க.. முதல்வர் வாய்ப்பை இழக்கும் ஆதித்யா.. உத்தவ் தாக்கரே மனமாற்றம்.. என்ன நடந்தது?
சிவசேனா கட்சி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தாலும், முதல்வர் பதவி உத்தவ் தாக்கரேவிற்குத்தான் வழங்கப்படும், ஆதித்யா தாக்கரேவிற்கு வழங்கப்படாது என்று கூறி உள்ளனர்.
Recommended Video
மும்பை: சிவசேனா கட்சி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தாலும், முதல்வர் பதவி உத்தவ் தாக்கரேவிற்குத்தான் வழங்கப்படும், ஆதித்யா தாக்கரேவிற்கு வழங்கப்படாது என்று கூறி உள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாது என்று பாஜக கூறிவிட்டது. சிவசேனா ஆதரவு தர மறுத்ததால் பாஜக இந்த முடிவை எடுத்தது. இந்த நிலையில் சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
இரண்டாவது பெரிய கட்சி என்பதால் சிவசேனாவிற்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். சிவசேனாவிற்கு விருப்பம் இருந்தால் இன்று மாலைக்குள் ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோரி கடிதம் அளிக்கலாம் என்று ஆளுநர் பகத் சிங் குறிப்பிட்டு இருக்கிறார்.

இவர்தான் காரணம்
மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் பாஜக இடையில் பிரச்சனை வந்ததற்கு காரணமே ஆதித்யா தாக்கரேதான் என்று கூட கூறலாம். அவர்தான் தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல்முறை தேர்தலில் நின்றார். அதில் எளிதாக வெற்றியும் பெற்றார்.

முதல்வர் பதவி
இதனால் அவர் தனக்கு முதல்வர் பதவி வேண்டும். இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார். இதனால்தான் சிவசேனா மற்றும் பாஜக இடையில் கடுமையான பிரச்சனைகள் உருவானது. கூட்டணியும் முறிந்தது.

இரண்டு கட்சிகள்
தற்போது தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை சிவசேனா எம்எல்ஏக்கள் கடிதத்தை ஆளுனரிடம் அளிக்க உள்ளனர்.

விட்டுக்கொடுத்த காங்கிரஸ்
சிவசேனாவிற்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது. ஆனால் சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே முதல்வர் ஆக போவது இல்லை. உத்தவ் தாக்கரேதான் முதல்வர் பதவியை ஏற்க போகிறார் என்கிறார்கள்.

இல்லை போச்சு
ஆதித்யா தாக்கரே முதல்வராக தேசியவாத காங்கிரஸ் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் மிகவும் இளையவர். சரத் பவார் போன்ற பெரிய நபர்கள் அவருக்காக இறங்கி வர முடியாது. உத்தவ் தாக்கரே என்றால் ஓகே. அவருக்கு ஆதரவு தருவோம் என்று கூறி உள்ளனர்.

முடிவு
இதனால் நமக்கு முதல்வர் பதவி வந்தால் போதும். ஆதித்யாவிற்கு ஏதாவது பெரிய அமைச்சரவை பொறுப்பை அளிக்கலாம் என்று சிவசேனா முடிவு செய்துள்ளது. ஆனால் உத்தவ் தாக்கரே இப்போது எம்எல்ஏ இல்லை. இதனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்று, பின் 6 மாதத்தில் எங்காவது ஒரு தொகுதியில் நின்று விரைவில் எம்எல்ஏ ஆவார் என்று கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications