நீ பேசாம இங்க வந்துருப்பா.. உன்னால சித்தப்பா பெயரும் கெடுது பாரு.. அஜீத்தை பேசியே கரைத்த பிரதீபா
அஜித்திடம் அவரது சித்தி பிரதீபா பேசி மனதை மாற்றியுள்ளார்
Recommended Video
மும்பை: " உன்னால் எனது கணவரின் பெயரும் சேர்ந்து கெடுது. பேசாமல் அங்கிருந்து நம்ம கட்சிக்கே திரும்பி வந்து விடு" என்று சரத் பவார் மனைவி போட்ட போட்டில்தான் அஜீத் பவார் மனசு மாறி அங்கிருந்து கிளம்பி வந்து விட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அஜீத் பவாருக்கு சித்தி பிரதீபா பவார் மீது மிகுந்த மரியாதை உண்டு. அவருடன் நிறைய பாசம் காட்டுபவர். தனது சித்தப்பா சரத் பவாரை விட சித்தியுடன்தான் நல்ல நட்பும், நெருக்கமும் கொண்டிருந்தார்.
இப்படி தன்னிடம் இத்தனை பாசமாக இருந்த அஜீத் பவார், டக்கென பாஜக பக்கம் பாய்ந்ததை பிரதீபாவால் ஜீரணிக்கவே முடியலையாம். அதை விட அஜீத் பவாரால் சரத் பவாரின் பெயரும் சேர்ந்து விமர்சிக்கப்பட்டதை ஜீரணிக்கவே முடியலையாம் பிரதீபா பவாரால்.

அம்மா
மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சாது ஷிண்டேவின் மகள்தான் பிரதீபா. சரத் பவாரின் மனைவி. அஜீத் பவாருக்கு மிகவும் பிடித்தவர் சித்தி பிரதீபாதான். அவர் சொன்னால் எதையும் தட்டவே மாட்டாராம். அத்தனை மரியாதை. அம்மா என்றுதான் அவர் அழைப்பது வழக்கம். அப்படிப்பட்டவர் தனது சித்தியையும் மறந்து பாஜக பக்கம் போனதுதான் குடும்பத்தினரை அதிர வைத்து விட்டது.

குடும்ப பாசம்
எப்போதுமே ஆண்களை விட பெண்களுக்குத்தான் குடும்பப் பாசம், குடும்ப ஒற்றுமை குறித்த அக்கறை அதிகம் இருக்கும் என்பார்கள். உண்மையும் கூட. ஆண்களுக்குள் ஏதாவது சண்டை வந்து விட்டால் கூட முதலில் பதறுவது பெண்கள்தான். காரணம், குடும்பத்தில் எங்கே விரிசல் வந்து விடுவோமா என்ற அச்சம்தான். இதனால் சண்டையை முதலில் வந்து விலக்கி விடுவது வீட்டுப் பெண்களாகத்தான் இருக்கும்.

பிரதீபா
அதே அச்சம், பயம், ஆற்றாமைதான் பிரதீபா பவாருக்கும் வந்தது. இப்படி சின்னப் புள்ளைத்தனமா செஞ்சிருச்சே இந்த பிள்ளை. இதனால் குடும்பத்தில் எங்கே விரிசல் வந்து விடுமோ என்று அஜீத் பவாரை நினைத்து அவர் அதிகம் கவலை கொண்டார். அதை விட முக்கியமாக, அஜீத் பவாரோடு சேர்ந்து சரத் பவாரின் பெயரும் விமர்சிக்கப்பட்டதால் தாங்கிக்கவே முடியலையாம் பிரதீபாவுக்கு.

சுப்ரியா கணவர்
இதையடுத்து எங்கே அந்த அஜீத் என்று கேட்டு அவரது இருப்பிடத்திற்கே நேரடியாகப் போய் விட்டாராம். அவருடன் மருமகன் சதானந்த் சுலேவும் (மகள் சுப்ரியாவின் கணவர்) போயுள்ளார். இருவரும் சேர்ந்து அஜீத் பவாரிடம் பேசியுள்ளனர். பாசத்தைக் காட்டி பேசியுள்ளனராம். "இப்படி செய்யலாமா.. என்ன பிரச்சினை.. எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம்.. முதல்ல அங்கிருந்து வந்துடு" என்று பிரதீபா வாஞ்சையுடன் கூறினாராம்.

ராஜினாமா
தான் மதிக்கும் சித்தியே நேரில் வந்து இப்படி அழைத்ததும் மனசளவில் கரைந்து போய் விட்டாராம் அஜீத் பவார். இதற்கு மேலும் பிடிவாதம் பிடிக்க அவருக்கு மனசு ஒப்பலையாம். இதனால்தான் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்று பிரின்ட் பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியா இரு
தற்போது பாஜகவை விட்டு விலகி வந்து விட்டாலும் கூட கொஞ்ச காலத்துக்கு அமைதியாக இருக்கப் போவதாக கூறியுள்ளாராம் அஜீத் பவார். "நீ அமைதியா இரு, இல்லை ஆக்டிவா இரு.. அது பிரச்சினை இல்லை. ஆனால் எப்போதும் எங்களுடனேயே இரு.." என்று அன்பாக கேட்டுக் கொண்டுள்ளாராம் பிரதீபா. அரசியலால் சாதிக்க முடியாததை தனது அன்பால் சாதித்து விட்டார் பிரதீபா என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் நெக்குருகி பேசிக் கொண்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications