ட்விஸ்ட் தரும் ஷிண்டே.. மும்பையில் மிஸ்ஸிங்! ஆட்சி அமைக்க முடியாமல் திணறும் பாஜக.. என்ன நடக்கிறது
மும்பை: மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகவுள்ளது. ஆனால் இன்னுமே அங்கு ஆட்சியை அமைக்க முடியாமல் பாஜக கூட்டணி திணறி வருகிறது. அமைச்சரவை குறித்த ஆலோசனை நடந்து வந்த நிலையில், திடீரென ஷிண்டே தனது சொந்த கிராமத்திற்குக் கிளம்பிச் சென்றுவிட்டார். இதனால் ஆலோசனைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் கடந்த வாரம் தேர்தல் நடந்த நிலையில், அதில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதேநேரம் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் நெருங்கும் போதிலும் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவுகிறது.

ஆலோசனை: இந்தச் சூழலில் தான் டெல்லியில் அமித் ஷா தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நள்ளிரவு வரை நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே மற்றும் என்சிபி தலைவர் அஜித் பவார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் கலந்து கொண்டார். மகாராஷ்டிராவில் புதிதாக அமையும் அரசில் அதிகாரப் பகிர்வு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஆலோசனை நடந்துள்ளது.
இந்த கூட்டம் சிறப்பாகவும் பாசிட்டிவாகவுமே இருந்ததாக ஷிண்டே கூறியிருந்தார். இதனால் விரைவில் மகாராஷ்டிரா குழப்பம் முடிவுக்கு வரும் என்றும் புதிய அரசு அமையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எல்லாருக்கும் ட்விஸ்ட் தரும் வகையில், திடீரென ஷிண்டே தனது சொந்த கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதனால் பேச்சுவார்த்தை தொடர முடியாமல் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் இல்லை: ஏக்நாத் ஷிண்டே திடீரென சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்குச் சென்றதால், அமைச்சரவை குறித்த விவாதம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அமைச்சரவை பகிர்வு தொடர்பாக முக்கிய கூட்டம் நடைபெற இருந்த நிலையில், ஷண்டே ஊருக்குச் சென்றுள்ளதால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் புதிய அரசு உருவாவதில் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது. ஷிண்டே நாளை சனிக்கிழமை தான் மும்பை திரும்புவார் என்று கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், பாஜக மட்டும் தனியாக 132 இடங்களில் வென்றுள்ளது. அங்குத் தனிப்பெரும்பான்மைக்கே 145 இடங்கள் இருந்தால் போதும். இதனால் முதல்வர் பதவி தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு தான் என்பது கிட்டதட்ட உறுதியாகவிட்டது. ஷிண்டே முதலில் முதல்வர் பதவியை விட்ட தரத் தயங்கினாலும் பின்னர் ஓகே சொல்லிவிட்டார். செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதை வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
ஷிண்டே திட்டம்: துணை முதல்வர் பதவி ஓகே தான் என்றாலும் உள் துறை தனக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம். அப்படி இல்லை என்றால் அவர் தனது மூத்த மகனுக்குத் துணை முதல்வர் பதவியைத் தர வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல பாஜகவின் மகாயுதி கூட்டணியில் இருந்த சிவசேனா 57 இடங்களையும், அஜித் பவாரின் என்சிபி 41 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. முதல்வர் பதவி கிடைக்காது என்பதால் அமைச்சரவையில் அதிக இடங்களைக் கேட்டுப் பெறுவதில் இரு கூட்டணிக் கட்சிகளும் உறுதியாக இருக்கிறது. பாஜகவை 2 துணை முதல்வர் பதவிகள் மற்றும் அமைச்சரவையில் அதிகபட்சமாக 20 பதவிகளைத் தரத் தயாராக இருப்பதாகச் சொல்லிவிட்டது.
என்ன சிக்கல்: இதில் தான் சிக்கலே நிலவுகிறது. என்சிபி தலா 10 அமைச்சரவை என்பது போலக் கேட்கிறது. ஆனால், அதிக இடங்களில் வென்றுள்ளதால் தங்களுக்கு என்சிபியை காட்டிலும் கூடுதல் அமைச்சர் பதவிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் ஷிண்டே தரப்பு உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாகவே அரசு அமைப்பதில் இழுபறி நீடிப்பதாகச் சொல்லப்படுகிறது.
-
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications