மும்பை மண்ணில் சாதனை.. கேப்டன் தமிழ்ச்செல்வன் தொடர்ந்து 3வது முறை எம்எல்ஏ! பின்னணி சீக்ரெட் என்ன?

Subscribe to Oneindia Tamil

மும்பை: மராத்தி மற்றும் ஹிந்தி பேசும் மும்பை மண்ணில் தொடர்ந்து 3வது முறையாக எம்எல்ஏவாக வென்றுள்ளார் தமிழ்ச்செல்வன்.

மகாராஷ்டிர சட்டசபை தேர்தலின்போது, மும்பை சயான் கோலிவாடா தொகுதி, காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் நேரடியாக மோதிய தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதியில் மற்றொரு சுவாரசியமும் இருந்தது. அதாவது, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கணேஷ் குமார் யாதவும், பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழ்ச் செல்வனும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.

maharashtra assembly election 2024 bjp congress 2024

மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் இரு தமிழர்கள் மோதிக்கொண்டது தமிழக மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக இருக்கும் பாஜகவின் தமிழ்செல்வன் 2014 ஆம் ஆண்டு முதல் எம்.எல்.ஏவாக இருக்கிறார். தொடர்ந்து 2வது முறையாக பதவியில் உள்ள தமிழ்ச்செல்வன் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்வேன் என்று சமீபத்தில் ஒன்இந்தியா தமிழிடம் நம்பிக்கை தெரிவித்தார்.

அவரது நம்பிக்கை பலித்துவிட்டது. நவம்பர் 23ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தமிழ்ச்செல்வன், 7895 வாக்குகள் வித்தியாசத்தில், கணேஷ்குமார் யாதவை வெற்றி பெற்றுள்ளார். தமிழ்ச்செல்வன் பெற்ற ஓட்டுக்கள், 73,429 பெற்றார். கணேஷ் குமார் யாதவ் 65,534 வாக்குகள் பெற்றார்.

இது தொடர்பாக கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ, தேர்தலுக்கு முன்பாக, "ஒன்இந்தியாதமிழ்" எடிட்டர் வீரக்குமரனுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

maharashtra assembly election 2024 bjp congress 2024

பேட்டியின் முழு வீடியோவையும் இந்த லிங்க்கில் கிளிக் செய்து பார்க்கலாம்:

மக்களுடன் நான் எளிதாக பழகுவது... மக்களுடைய பிரச்சினைகளுக்கு முடிந்த அளவு உதவி செய்வது போன்றவை மக்களுக்கு பிடிக்கிறது. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யலாம்.. மக்கள் மனதில் பெயர் பதிந்தால் போதும். யார் என்று அவர்கள் கேட்பது இல்லை. இவரிடம் போனால் வேலை நடக்கும் என நம்பிக்கையோடு வரும் மக்களுக்கு திருப்பி அனுப்பாமல் என்னால் முடிந்த அளவு வேலை செய்வது தான் என்னுடைய சக்சசுக்கான காரணம்.

பாஜக என்ற கட்சியின் பெயர், மோடி, தேவேந்திர பட்னாவிசின் செல்வாக்கு கட்சியினர் ஒற்றுமையாக ஒரு குடும்பமாக வேலை செய்கிறோம். என்னுடைய போன் நம்பர் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் உள்ளது. ஏதேனும் வேலை என்றால் நேரடியாக சொல்கிறார்கள். நேரடியாக மக்களிடம் நேரடி தொடர்பில் உள்ளேன். பிஏ கூட கிடையாது. எனவே, பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மக்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்து இருக்கிறேன். தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்து இருக்கிறேன். எம்.எல்.ஏவின் பணி எதுவோ அதை ஒன்றுவிடாமல் செய்து வருகிறோம். மக்களோடு நேரடி தொடர்பில் இருப்பதே தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற காரணமாக உள்ளது" என்றார்.

மகாராஷ்டிராவுக்கு வந்தது எப்படி என்பது பற்றி பேசிய தமிழ்ச்செல்வன், "1978-ல் மகாராஷ்டிராவிற்கு வந்தேன். அம்மா இன்னும் ஊரில்தான் இருக்கிறார். தம்பி ஊரில்தான் இருக்கிறார்கள். முதன் முதலில் 2014-ல் எம்.எல்.ஏவாக ஆனேன். 2024 லும் எம்.எல்.ஏ ஆவேன். வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+