மகாராஷ்டிராவில் 'சுனாமி'யாக கொரோனா தொற்று- ஒரே நாளில் 46,723 பேருக்கு பாதிப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சுனாமிப் பேரலையாக உருவெடுத்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் 46,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் இன்று காலை நிலவரப்படி ஒருநாள் கொரோனா பாதிப்பு சுமார் 2 லட்சத்தை நெருங்கியிருந்தது. நாட்டின் பல மாநிலங்களில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனால் நாளை காலை 7 மணிக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு சுமார் 3 லட்சத்தை நெருங்கும் நிலை உள்ளது.

மகாராஷ்டிரா, மும்பை
மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமே 46,723 பேருக்கு இன்று மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 32 பேர் மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இம்மாநிலத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 2,40,122. மகாராஷ்டிராவில் ஓமிக்ரான் பாதிப்புய் எண்ணிக்கை 1367. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று 16,420 பேருக்கு கொரோனா தொற்று பதிவானது. மேலும் மும்பையில் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். செவ்வாய்க்கிழமையை ஒப்பிடுகையில் இன்று கூடுதலாக 4,773 கேஸ்கள் பதிவாகி உள்ளன.

டெல்லி, மேற்கு வங்கம்
டெல்லியில் இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 27,561 ஆக பதிவாகி இருக்கிறது. கடந்த 8 மாதங்களில் டெல்லியில் இதுதான் அதி உச்ச பாதிப்பாகும். டெல்லியில் கொரோனாவுக்கு மொத்தம் 87,445 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 23 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் இன்று ஒருநாள் கொரோனா தொற்று எண்ணிக்கை 22,155. கொரோனாவால் இன்று 23 பேர் இம்மாநிலத்தில் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1,16,251.

கர்நாடகா
கர்நாடகாவில் இன்று 21,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் 1541 பேர் குணமடைந்தனர். கர்நாடகாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 10 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். கர்நாடகாவின் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 93,099.

தமிழகம், கேரளா
தமிழகத்திலும் இன்று கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்தை நெருங்கியது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,934. 4,039 பேர் குண்மாடைந்தனர். கொரோனாவால் 19 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் ஆக்டிவ் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை 88,959. கேரளாவில் 12,742 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும் 2552 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். இன்று மட்டும் கேரளாவில் 23 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் கொரோனா சிகிச்சை பெறுகிற ஆக்டிவ் கேஸ்கள் 54,430.












Click it and Unblock the Notifications