வெற்றி வெற்றி.. பேருந்தில் கொண்டாட்டமாக ஆடிக்கொண்டு வந்த சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள்.. ஒரே ஜாலி!

மும்பையில் நடக்கும் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்திற்கு சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் 162 பேரும் கொண்டாட்டமாக ஆடிக்கொண்டே வந்தனர்.

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் நடக்கும் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்திற்கு சிவசேனா ஆதரவு எம்எல்ஏக்கள் 162 பேரும் கொண்டாட்டமாக ஆடிக்கொண்டே வந்தனர்.

மகாராஷ்டிராவில் நாளை மாலை சிவசேனா தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது. சிவசேனா உடன் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளது. நாளை காலை சிவசேனா பெரும்பான்மையை நிரூபிக்கும்.

Maharashtra: Sena, NCP and Congress alliance MLAs celebrating their victory

சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அங்கு முதல்வராக பதவி ஏற்க இருக்கிறார். இன்று மாலைதான் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தன்னுடைய பதவியில் இருந்து விலகினார்.

இந்தநிலையில் இன்று சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் சார்பாக ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது. மும்பையில் இருக்கும் ட்ரிடென்ட் ஹோட்டலில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதனால் மூன்று கட்சி தலைவர்களும் அங்கு வருகை புரிந்துள்ளனர்.

அதன்படி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அவரின் மனைவி, ஆதித்யா தாக்கரே, சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், நவாப் மாலிக், காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண் ஆகியோர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் இன்று முக்கிய ஆலோசனை செய்கிறார்கள்.


இந்த ஆலோசனையில் கலந்து கொள்வதற்காக வெவ்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கும் 162 எம்எல்ஏக்கள் எல்லோரும் பேருந்தில் மும்பையில் இருக்கும் ட்ரிடென்ட் ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் வரும் வழியில் வெற்றி கோஷமிட்டபடி வந்தனர்.

சிவசேனா வாழ்க, காங்கிரஸ் வாழ்க, என்சிபி வாழ்க என்று கோஷமிட்டபடி வந்தனர். அதேபோல் நாங்கள் 162 பேர் என்று மராத்தி, இந்தியில் கோஷமிட்டபடி வந்தனர். இன்னும் சிலர் பேருந்திலேயே டான்ஸ் ஆடியபடி கொண்டாட்டமாக வந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+