தேசியவாத காங்கிரசை அழைத்த ஆளுநர்.. சரத் பவார் கையில்தான் முடிவு.. இன்று மகாராஷ்டிராவில் கிளைமேக்ஸ்!
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா நேற்று கேட்டு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
Recommended Video
மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியுமா என்று கேட்டு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று இரவு 8.30 மணிக்குள் ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் அக்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடந்து வருகிறது. மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் வந்து மூன்று வாரம் ஆகியும் இன்னும் அங்கு யாராலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. பாஜக அங்கு ஆட்சி அமைக்க முடியாது என்று பின்வாங்கிவிட்டது. சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. அங்கு சிவசேனாவுடன் நடந்த மோதலால் பாஜக அரசு தனது அமைச்சரவையை கலைத்துள்ளது.

ஆளுநர் அழைத்தார்
இதையடுத்து பாஜகவை ஆட்சி அமைக்க வரும்படி ஆளுநர் அழைத்தார். ஆனால் பாஜக எங்களுக்கு பெரும்பான்மை இல்லை. நாங்கள் ஆட்சி அமைக்க முடியாது. எங்களுக்கு போதிய ஆதரவு இல்லை என்று கூறிவிட்டது.

இரண்டாவது பெரிய கட்சி
அதன்பின் இரண்டாவது பெரிய கட்சி என்பதால், மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங, சிவசேனா கட்சிக்கு அழைப்பு விடுத்தார். நேற்று சிவசேனா கட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. இவர்களின் பேச்சுவார்த்தையில் உடன் படிக்கை ஏற்படவில்லை.

அவகாசம் கேட்டது
இதனால் சிவசேனா கூடுதல் அவகாசம் கேட்டது. ஆனால் ஆளுநர் மூன்று நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்க முடியாது என்று கூறிவிட்டார். இந்த நிலையில் தற்போது மூன்றாவது பெரிய கட்சி என்பதால் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று இரவு 8.30 மணிக்குள் ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் அக்கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று முடிவு
தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ன செய்யும். காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது. இதனால் அந்த கட்சி என்ன முடிவு செய்யும். மகாராஷ்டிராவில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications